For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தை அமாவாசை: ராமேஸ்வரம், கன்னியாகுமரியில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

"Thai Amavasya" celebrated with religious fervour
ராமேஸ்வரம்: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக்கடலிலும், கன்னியாகுமரி, திருச்செந்தூர் கடலிலும் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் காசிக்கு இணையாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசையன்றும் இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடுவது இந்துக்களின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது.

தை அமாவாசை தினமான இன்று இந்தியாமுழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். மேலும் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் புனித நீராடினர். தைஅமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புனித ஸ்தலங்களான திருப்புல்லாணி, தேவி பட்டினம் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் சாமி கும்பிட்டு, தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப் பணம் கொடுத்தனர்.

கன்னியாகுமரியில் குவிந்த கூட்டம்

இதேபோல் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்பணம் அளித்தனர்.

இதேபோல் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றுவருகிறது. விழாவையொட்டி ஏரல் கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் தாமிபரணி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தாமிரபரணியில் குவிந்த கூட்டம்

பாபநாசம் கோவிலிலும் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி படித்துறையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

திருச்செந்தூரில் நீராடல்

நெல்லையில் குறுக்குத்துறை கோவில், வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

வேதாரண்யத்தில் குவிந்த பக்தர்கள்

இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யத்திலும், கோடியக்கரையிலும் ஏராளமானோர் குவிந்துள்ளனர். காலை முதலே புனித நீராடிய அவர்கள் முன்னோர்களுக்கு எள்ளும், அரிசியும் வைத்து திதி கொடுத்து வழிபட்டனர்.

English summary
Thousands of Hindus from various parts of the country took a holy dip in 'Agni Theertham' (sea) and performed oblations to the departed ancestors in Rameswaram Island, Triveni Sangamam in Kanyakumari and various holy ghats across the state on the occasion of 'Thai Amavasya', today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X