வெள்ளிக்கிழமை பூமியை நெருங்கும் விண்கல்; செயற்கை கோள்களில் மோதலாம்!

2012 DA14 என்ற இந்த விண்கல் 45.7 விட்டம் கொண்டது. இது முதலில் பூமியின் மீது மோதலாம் என அஞ்சப்பட்டது. ஆனால், அதற்கான வாய்ப்பே இல்லை என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா தெரிவித்துள்ளது.
இந்த விண்கல் பூமியை வெறும் 27,681 கி.மீ தூரத்தில் கடந்து செல்லப் போகிறது. இது அண்டவெளியில் அளவுகளோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறுகிய தூரமாகும். இவ்வளவு நெருக்கத்தில் ஒரு விண்கல் பூமியை நெருங்கிச் செல்வதை இதுவரை விஞ்ஞானிகள் பார்த்தும் இல்லை.
இது பூமியில் வந்து விழப் போவதில்லை என்றாலும் பூமிக்கு மேலே சுமார் 35,406 கி.மீ உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளில் நூற்றுக்கணக்கான தொலைத் தொடர்பு, வானிலை, உளவு செயற்கைக் கோள்களில் ஏதாவது ஒன்றின் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வரும் வெள்ளிக்கிழமை பூமியை 27,681 கி.மீ தூரத்தில் கடந்து செல்லப் போகும் இந்த விண்கல்லை உலகின் பல்வேறு வானியல் தொலைநோக்கிகளும், வானில் சுற்றும் ஹப்பிள் தொலைநோக்கியும் கண்காணித்துக் கொண்டுள்ளன.
அதே போல இது பூமிக்கு அருகே வந்துவிட்டுப் போவதைக் காண ஆயிரக்கணக்கான விண்வெளி ஆர்வளர்களும் தங்களது புவியியல் தொலைநோக்கிகளுடன் வான்வெளியை நோக்க வருகின்றன.
இந்த விண்கல் மணிக்கு 30,000 கி.மீ. வேகத்தில், அதாவது ஒலிவை விட 8 மடங்கு வேகத்தில் பயணிக்கவுள்ளது. இது ஏதாவது ஒரு செயற்கைக் கோளின் மீது மோதினால் என்ன ஆகும் என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை.
தொடர்பான செய்தி:
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications