For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யோவ்.. நம்ம ஊர்ல மழை பெஞ்சுக்கிட்டு இருக்குயா!

By Chakra
Google Oneindia Tamil News

Rains in Southern Tamil Nadu
சென்னை: விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

இலங்கை அருகே ஏற்பட்டுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தேனி ஆகிய இடங்களில் பலத்த மழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ராமேஸ்வரம், பாம்பனில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்து வந்தது. இந் நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம், கீழக்கரை, சத்திரகுடி, பரமக்குடி, தேவிபட்டினம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் போன்ற இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. அலைகள் 10 அடி உயரத்துக்கு எழுகின்றன.

கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் 2,000 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

சிவகங்கை மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை, மானாமதுரை, ராஜகம்பீரம், காரைக்குடி போன்ற இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அதே போல விருதுநகர் மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் சாத்தூர், இருக்கன்குடி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், சிவகாசி போன்ற இடங்களில் பலத்த மழை பெய்தது.

மதுரை மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. மதுரை, உசிலம்பட்டி, அவனியாபுரம், அலங்கால்லூர் பகுதிகளில் மழை பெய்ததோடு குளிர்ந்த காற்றும் வீசுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் மேகமூட்டமாக இருக்கும். தமிழகம் மட்டுமின்றி பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

English summary
The drought hit Southern Tamil Nadu is blessed with unexpected rains from yesterday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X