நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல்- 80%க்கும் அதிகமாக வாக்குகள் பதிவு!
Subscribe to Oneindia Tamil

நாகாலாந்தில் 59 தொகுதிகளுக்கும் மேகாலயாவில் 60 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது.அனைத்து பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 4 மணியுடன் நிறைவடைந்த வாக்குப் பதிவில் 83% வாக்குகள் பதிவாகின.
மேகாலயா மாநிலத்தில் 60 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இம்மாநிலத்தில் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி ஆயுதக் குழுவினர் முழு அடைப்புக்கும் அழைப்பு விடுட்திருந்தனர். இருப்பினும் மாலை வரை மொத்தம் 88% வாக்குகள் பதிவாகி இருந்தன.
இதற்கு முன்பு திரிபுரா மாநிலத்தில் 93% வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications