For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில்வே பட்ஜெட் 2013-14 - முக்கிய அம்சங்கள்

Google Oneindia Tamil News

Railway budget
டெல்லி: 2013-14ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளமுக்கிய அம்சங்கள்:

ரயில்வே துறை புதிதாக செயல்படுத்த உள்ள 12 திட்டங்களுக்கு ரூ.1.05 லட்சம் கோடி செலவு செய்யப்படும்.

ரே பரேலி, பில்வாரா, சோனிபட், கலாஹன்டி, கோலார், பாலக்காடு, பிரதாப்கர் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் பெட்டிகள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு தொழிற்சாலைகள்.

இந்த நிதியாண்டில், நிதி அமைச்சகத்திடம் இருந்து ரூ.3000 கோடி வட்டியுடன் கூடிய கடனாக ரயில்வே அமைச்சகம் பெற்றுள்ளது.

100 கோடி டன் சரக்குகளைக் கையாளும் திறனை பெற்றுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெறும்.

இந்தியாவில் உள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 5 உதவித் தொகை திட்டங்கள் அறிவிக்கப்படும்.

செகந்தராபாத்தில் மத்திய ரயில்வே பயிற்சி மையம் அமைக்கப்படும்.

ரயிலில் உள்ள சமையலறை கூடங்களுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் கட்டாயமாக்கப்படும்.

துறைமுகப் பகுதிகளை ஒருங்கிணைக்க ரூ.3800 கோடி

1800111321 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ரயில்வே பற்றிய விவரங்களை கேட்டறிந்து கொள்ளலாம்.

பயணிகள் மூலம் ரூ. 42,210 கோடி வருவாய் கிடைக்கும்

சரக்குப் போக்குவரத்து மூலம் ரூ. 93 ஆயிரம் கோடி கிடைக்கும்

ரயில்வே சரக்குக் கட்டணம் 5 சதவீதம் உயர்வு

26 புதிய பாசஞ்சர் ரயில்கள் அறிமுகம்

67 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம்

பயணிகள் கட்டணத்தில் உயர்வில்லை

விளையாட்டு வீரர்கள், மரணத்திற்குப் பிந்தைய வீர விருது பெற்ற படை வீரர்களின் பெற்றோர்களுக்கு ரயில் பயணக் கட்டணத்தில் சலுகை

சுதந்திரப் போராட்ட தியாகிகள் 3 வருடங்களுக்கு ஒருமுறை பாஸ்களை புதுப்பிக்க வேண்டும்

குறிப்பிட்ட ரயில்களில் 'வை ஃபி' வசதி அறிமுகம்

குறிப்பிட்ட ரயில்களில் நவீன வசதிகளுடன் கூடிய அனுபூதி கோச்சுகள் அறிமுகம்

அருணாச்சல் பிரதேசத்திற்கு முதல் முறையாக ரயில் சேவை அறிமுகம்

திருச்சி உள்ளிட்ட 25 இடங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் அமைப்பு

மாணவர்களுக்காக ஆசாதி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்

ரயில்வே ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்ட ரூ.300 கோடி ஒதுக்கீடு

ரயில்வேயில் 1.52 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்

டெல்லி நிஜாமுதீன், ஹசரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.100 கோடி

நடப்பாண்டில் ரயில்வே ரூ 100 கோடி சரக்குகளை கையாண்டு சாதனை

தனியார் உதவியுடன் ரயில்வே துறையில் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நவீனப்படுத்தப்படும்

ஆன்லைன் மூலம் நிமிடத்திற்கு 7200 டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் நவீனப்படுத்தப்படும்

ஆன்லைன் முன்பதிவு நேரம் முற்பகல் 12 மணி முதல் இரவு 11.30 வரை செயல்படுத்தப்படும்

179 ரயில்வே நிலையங்களில் எஸ்கலேட்டர் அமைக்கப்படும்

400 ரயில் நிலையங்களில் லிப்ட் அமைக்கப்படும்

ரயில்வே உணவு தயாரிப்புக் கூடங்கள் நவீனப்படுத்தப்படும்.

உணவின் தரத்தை பரிசோதிக்கவும் தனி ஏற்பாடு

ரயில்வே உணவு தயாரிப்புக் கூடங்கள் நவீனப்படுத்தப்படும்

உணவின் தரத்தை பரிசோதிக்கவும் தனி ஏற்பாடு

பெண்கள் பாதுகாப்புக்கு கூடுதலாக 4 பெண்கள் பாதுகாப்புப் படை அமைக்கப்படும்

நாடு முழுவதும் 10197 ஆளில்லா ரயில்வே கேட்கள் மூடப்படும்

17 முக்கிய ரயில்வே பாலங்கள் சீரமைக்கப்படும்

ரயில் நிலையங்கள், ரயிலில் தூய்மையை கடைப்பிடிக்க தீவிர நடவடிக்கை

ரயில்வேக்கான பாதுகாப்பு நிதி பத்தவில்லை

ரயில்வே போலீஸ் படையில் பெண்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்

1040 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்

பெண்கள் பாதுகாப்புக்கு 24 மணி நேர தொலைபேசி வசதி

பயணம் செய்யும்போதே ரயில்வே அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும் வசதி விரிவுபடுத்தப்படும்

ரயிலில் தீவிபத்துக்களைத் தவிர்க்க நவீன தொழில்நுட்பம் அறிமுகம்

ரயில் குடிநீர் நிலையம் விஜயவாடா, நாக்பூர் அகமதாபாத், பிலாஸ்பூரில் அமைக்கப்படும்

விபத்தே இல்லா ரயில் பயணத்திற்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம்: பன்சால்

நஷ்டம் ரூ.22, 500 கோடியில் இருந்து ரூ. 24, 600 கோடியாக உயர்வு

ரூ. 95,000 கோடி பணப் பற்றாக்குறை உள்ளது

ரயில் விபத்துகள் பெரும் அளவில் குறைந்துள்ளது

திட்ட கமிஷன் ரூ. 5.19 லட்சம் கோடி ஒதுக்கீடு: பன்சால்

ரூ. 1.47 கோடி மதிப்புள்ள 347 ரயில் திட்டங்கள் நிலுவையில் உள்ளன

English summary
Highlights of union railway budget 2013-14.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X