For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிஷல் ஒபாமாவுக்கு ஈரான் டி.வி. பலவந்தமாக அணிவித்த முழு உடை!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Michelle Obama's Oscars dress too revealing for Iranian media
ஆஸ்கர் விருது அறிவிக்கும் போது, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷெல் அணிந்திருந்த உடையை கிராபிக்சில் மாற்றி, இஸ்லாமிய குடியரசில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு கொண்டுவந்து, டி.வி.யில் ஒளிபரப்பியது ஈரான்.

திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த படத்துக்கான விருதை ‘ஆர்கோ' படம் தட்டி சென்றது. இந்தப் படம், ஈரானில் சி.ஐ.ஏ. நடத்திய ஆபரேஷன் பற்றியது. ஈரானில் தடை விதிக்கப்பட்ட இந்தப் படம்தான்தான் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதிலேயே கடும் கடுப்பில் இருந்தது ஈரான்.

சிறந்த படத்துக்கான விருதை வெள்ளை மாளிகையில் இருந்து ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷெல் அறிவித்தார். அப்போது அவர், ஸ்லீவ்லெஸ் டிரெஸ் அணிந்திருந்தார் மிஷெல்.

ஈரானில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் உள்ளன. கழுத்து, கைகள். கால், தலைமுடி ஏதும் தெரியக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.

இதையடுத்தே, மிஷெல் ஒபாமாவுக்கு, இஸ்லாமிய குடியரசில் அனுமதிக்கப்பட்ட உடையை கிராபிக்ஸில் அணிவித்து, டி.வி.யில் ஒளிபரப்பியது, ஈரான்.

ஈரானுக்கு பிடிக்காத படத்துக்கு விருது கொடுத்திருக்கிறார் மிஷல், ஈரானுக்கு பிடிக்காத உடை அணிந்திருக்கிறார். அப்படியிருந்தும், ஏன் பிடிவாதமாக அவரது படத்தை இவ்வளவு கஷ்டப்பட்டு ஒளிபரப்பு செய்ய வேண்டும்? பேசாமல் ஒளிபரப்பாமலேயே விட்டிருக்கலாமே?

ஆனால் ‘ஆர்கோ' படம் பற்றி தெரிந்திராத ஈரானியர்களுக்கும் தெரியப்படுத்தி இருக்கிறது ஈரானிய அரசு.

English summary
Iran's Fars news agency Photoshops First Lady's dress to cover up her neckline in coverage of Academy Awards ceremony
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X