For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இத்தாலி தூதரை நாட்டை விட்டு வெளியேற விடாதீர்கள் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

Italian Ambassador Daniele Mancini
டெல்லி: இத்தாலி தூதர் டேணியல் மன்சினி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. அவரை மத்திய அரசு வெளியேற விடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிபந்தனையின் பேரில், இத்தாலி நாட்டை சேர்ந்த கடற்படை பாதுகாவலர்கள் மாஸ்சி மிலியானோ லாட்டோரே, சல்வாட்டோராகி ரோனே ஆகிய 2 பேரும் இத்தாலிக்கு சென்று விட்டு 4 வார காலத்துக்குள் இந்தியா திரும்பி வர ஜாமீனில் அளிக்கப்பட்டது. எனவே இத்தாலி வீரர்கள் இருவரும் 22ந்தேதி இந்தியா திரும்பி வரவேண்டும்.

ஆனால் திடீரென, தங்களது நாட்டு வீரர்கள் 2 பேரும் இந்தியா திரும்ப மாட்டார்கள் என இத்தாலி அரசு என நேற்று முன்தினம் அறிவித்தது.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு:

இத்தாலியின் இந்த அறிவிப்புக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாராளுமன்றத்திலும் இந்த பிரச்சினை உணர்வுபூர்வமாக விவாதிக்கப்பட்டது. .

இத்தாலி தூதர் அறிவிப்பு

இந்தியாவில் உள்ள இத்தாலி தூதர் டேனியல் மன்சினியை, இந்தியா உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இத்தாலி நாட்டு தூதர் டேனியல் மன்சினி, 'நான் இந்தியாவை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன்' என அறிவித்தார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் பேசுகையில், "எனது தூதர் பதவியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் வரை நான் இந்தியாவை விட்டு வெளியேறமாட்டேன். இந்தியாவிலேயே தொடர்ந்து இருப்பதை விரும்புகிறேன்.

நாங்களும் (இத்தாலி) இந்தியாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருக்கிறோம். நாங்கள் இந்தியாவில் தொடர்ந்து பணியாற்றவதையே விரும்புகிறோம். மாலுமிகள் பிரச்சினையில் இந்தியாவின் கவலையை இத்தாலி நாட்டு அதிகாரிகள் பரிசீலிக்கிறார்கள். என்னை இந்திய அரசு அழைத்த போது இந்த கருத்தை தான் அவர்களிடம் கூறினேன். சட்ட பிரச்சினையையும், இருநாடுகளுக்கு இடையே உள்ள உறவு பிரச்சினையையும் தனித்தனியாகத்தான் பார்க்க வேண்டும்" என கூறினார்.

சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

இதற்கிடையே, மன்சினி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது, அவர் வெளியேறி விடாமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், இத்தாலி தூதர் மன்சினி நாட்டை விட்டு உச்சநீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் வெளியேறக் கூடாது. மத்திய அரசு அவர் வெளியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கூலம் வாஹன்வதி கூறியுள்ளார். இதன் அடிப்படையிலேயே தான் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று மன்சினி கூறியுள்ளதாக தெரிகிறது.

மேலும் சுப்ரீம் கோர்ட் முன்பு நேரில் ஆஜராகி இத்தாலி கடற்படை வீரர்களை திருப்பி அனுப்ப மாட்டோம் என்று இத்தாலி அரசு கூறியிரு்ப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மன்சினிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வக்கீல் விலகல்:

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், 2 இத்தாலி கப்பல் பாதுகாவலர்கள் சார்பில் ஆஜராகி வந்த மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே, அந்த வழக்கில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். மேலும், இத்தாலி வீரர்களுக்காக இனிமேல் வாதிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

English summary
The Supreme Court of India on Thursday sought to restrain Italy's ambassador from leaving the country in response to Rome's declaration that two Italian marines will not return to India to stand trial on murder charges. In a notice, the court said Italian Ambassador Daniele Mancini is not allowed to leave India without its permission, said India's attorney general, Goolam E. Vahanvati, in an interview. The move adds more tension to already-fraught relations between the two countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X