For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவர்களைத் தொடர்ந்து தமிழகத்தில் பொதுமக்கள், ஈழ அகதிகளும் போராட்டம்!!

By Mathi
Google Oneindia Tamil News

Tamil refugees observe fast
சென்னை: தமிழீழம் கோரி தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக நீடித்து வரும் மாணவர்கள் போராட்டம் பொதுமக்களின் போராட்டமாக வெடித்திருக்கிறது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள், தமிழீழ அகதிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூரில் நேற்று பொதும்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு தடியடி வாங்கினர். காஞ்சிபுரம் மாவட்டம் ஆனூரில் பொதுமக்கள் 1000 பேர் உண்ணாவிரதம் இருந்தார்கள் தேனி மாவட்டம் கம்பத்தில் திராட்சைத் தோட்டத் தொழிலாளர்களும் பேரணியும் உண்ணாவிரதமும் இருந்தனர். தமிழ்நாடு லாரி சம்மேளன ஊழியர்கள் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர்.

சென்னையில் 3 பர்மா தமிழர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

தமிழீழம் கோரி திருவண்ணாமலை, நாமக்கல், பவானி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான ஈழ அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அரியலூரை அடுத்த செந்துறையில் வாகன ஓட்டுநர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

உருத்திரகுமாரன் உரை

இதனிடையே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஊடக மாநாடு இன்று தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பில் இணையவழி காணொளியூடாக வி.உருத்திரகுமாரன் உரையாற்றுகிறார்.

English summary
Fasts and protests over the Lanka issue in the central region continued with Sri Lankan Tamil refugees also jumping into the fray.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X