For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைக்கு எதிரான நீர்த்துப் போன தீர்மானத்தை இன்று நிறைவேற்ற தயாராகும் ஐ.நா.

Google Oneindia Tamil News

Srilankan War Crime
ஜெனிவா: இந்தியாவின் தலையீட்டாலும், இலங்கையின் கெஞ்சலாலும், தான் கொண்டு வந்த தீர்மானத்தை முடிந்த வரை நீர்த்துப் போகச் செய்து விட்டது அமெரிக்கா. இன்று இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தற்போது தயாராகி வருகிறது.

21ம் தேதி இத்தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்படுகிறது. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்தத் தீர்மானத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவித பெரிய பலனும் கிடைக்கப் போவதில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அந்த அளவுக்கு தண்ணீரை ஊற்றி தீர்மானத்தை நமுத்துப் போகச் செய்து விட்டனர்.

தற்போது இந்தத் தீர்மானத்தின் நகல் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தில் இலங்கையில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையரின் மேற்பார்வையில், சுயேச்சையான விசாரணை நடைபெற வேண்டும் என்று இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது. இருப்பினும் சர்வதேச விசாரணை தேவை என்று இந்த தீர்மானம் சொல்லவில்லை. முதலில் அந்த வார்த்தை இருந்ததை. அதை பின்னர் நீக்கி விட்டது அமெரிக்கா.

முதலில் இந்தத் தீர்மானம் மார்ச் 12ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அதில் திருத்தம் செய்து புதிய ஒன்றை 18ம் தேதி சமர்ப்பித்தனர். மறுபடியும் அதில் இரு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் வலுவான தீர்மானமாக அது அமையாமல் போய் விட்டது.

இந்தத் தீர்மானம் இன்று நிறைவேற்றப்படவுள்ள நிலையில், இது ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையில் உதவியாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் கூடவே எழுந்துள்ளது.

பிரதமருடன் சிவசங்கர் மேனன் சந்திப்பு:

இந் நிலையில் வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர்.

இலங்கை விவகாரம் குறித்து அவர்கள் பேசியதாகத் தெரிகிறது.

திருத்தம் கொண்டு வர இந்தியா முடிவு

இதற்கிடையே, அமெரிக்க தீர்மானத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதை மத்திய அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.மூத்த அமைச்சர்களும் இதை உறுதி செய்துள்ளனர். இதுதொடர்பான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளனவாம். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், இலங்கைக்கு எதிராக வலுவான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடும் கூட. சுயேச்சையான விசாரணைக்கு அந்த நாடு ஒத்துக் கொள்ள வேண்டும் என்பதும் இந்தியாவின் நிலையே என்றார்.

மொத்தம் உள்ள 47 உறுப்பு நாடுகளில் 24 நாடுகள் வரை இந்தியா திருத்தம் கொண்டு வந்தால் அதை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், காங்கிரஸுக்கு எதிராகவும் மிகக் கடுமையான சூழல் காணப்படுவதால் அதைக் கண்டு மத்திய அரசும், காங்கிரஸும் சற்றே பீதியடைந்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாகவே லேசுபாசான திருத்தங்களைச் செய்து தமிழக மக்களை அமைதிப்படுத்த முடியுமா என்று காங்கிரஸ் யோசிகப்பதாக தெரிகிறது.

English summary
The United Nations is gearing up for a vote on Sri Lanka this week that will hold it accountable for alleged war crimes against its ethnic Tamil population during the final phases of the bloody civilian war against the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE). The US, which is sponsoring the motion against Colombo, has circulated a draft of the resolution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X