இனப்படுகொலை குறித்து விசாரணை தேவை : இலங்கைக்கு அமெரிக்கா உத்தரவு

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடத்த இறுதிக்கட்ட போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனைப் போர்க்குற்றம் என்றும் இனப்படுகொலை என்று தமிழின ஆர்வலர்களும், உலகத் தமிழர்களும் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இரண்டு முறை கண்டன தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.
இந்த நிலையில் இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா அரசின் செய்தி தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் நடை முறைப்படுத்தாத திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்கள் அனைத்துலக சமூகத்தின் சொல்லைக் கேட்க வேண்டும்.
தனது சொந்த மக்களுக்கு அதன் பொறுப்புகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு அழைப்பு விடுக்கிறோம். நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறலில் இன்னமும் நிறைவேற்றப்படாத விவகாரங்களுக்கு பதிலளிப்பதற்கு இலங்கை அரசுக்கு அனைத்துலுக சமூகத்தின் ஆதரவை தீர்மானம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
6 மாதங்களுக்கு முன்னதாகவே இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தோம். வாஷிங்டனுக்கு வந்த இலங்கையின் மூத்த அதிகாரி உள்ளிட்டோரிடம், மிகத் தெளிவாகவே கூறியிருந்தோம்.
நீங்கள் முன்னே அடியெடுத்து வைக்காவிட்டால் இதேபோன்று மீண்டும் தீர்மானத்தை கொண்டு வருவோம் என்று கூறியிருந்தோம். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.
2012-ல் அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தை வரவேற்ற 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இப்போது அதை விட அதிகமாகவே ஆதரவு கிடைத்துள்ளது.
எனவே மீண்டும் இலங்கை என்ன முடிவுகளை எடுககப்போகிறது என்று பார்க்க வேண்டும். போர்க்குற்றம் பற்றி விசாரணை பெறாவிட்டால், நாம் அடுத்த அடிகளை எடுத்து வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications