For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி நெடுஞ்சாலையில் பஞ்சாப் உதவி சப் இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை

Google Oneindia Tamil News

சண்டிகர்: டெல்லி - ஜலந்தர் தேசிய நெஞ்சாலையில் நேற்று இரவு உதவி சப் இன்ஸ்பெக்டர் அடையாளம் தெரியாத மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

குருதேவ் சிங் என்ற அந்த உதவி துணை ஆய்வாளர், நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது டெல்லி ஜலந்தர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ற சிலரை போலீசார் நிறுத்த சொல்லியும் அவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். குருதேவ் அவர்களை பின் தொடர்ந்துள்ளார். அப்போது அவர்கள் போலீசாரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருதேவை துப்பாக்கியால் சுட்ட அந்த மர்ம நபர்கள் யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

பஞ்சாபில் காவல்துறையினர் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த வாரம் ரவீந்தர் சிங் பால் என்ற போக்குவரத்து காவலர், ஒரு டிரக்கை நிறுத்த சொன்ன போது, அந்த டிரக் டிரைவர் அவைர இடித்துவிட்டு சென்றான்.

இதேபோன்று, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மற்றொரு உதவி சப் இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் காவல் துறையினர் தொடர்ந்து தாக்கப்படுவதால், அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

English summary
An assistant sub-inspector of Punjab Police was shot dead by unidentified assailants on Delhi-Jalandhar highway late on Sunday. According to reports, ASI Gurdev Sigh was shot as he signalled a car to stop on the highway. Singh was in night patrolling duty when the incident took place. This is not the first time that a police personnel has been fatally attacked in Punjab.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X