For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக ஜப்பானில் கடும் குளிரில் தமிழர்கள் உண்ணாவிரதம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டோக்கியோ: இலங்கைத் தமிழகர்களுக்கு ஆதரவாகவும், தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஜப்பானில் டோக்கியோ வாழ் இந்தியத் தமிழர்கள் ஞாயிறன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

இணைய தளங்கள் வாயிலாகவும், சமூகவலைத் தளங்கள் மூலமும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற ஒருமித்த கருத்துடன், டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக தமிழகர்கள் திரண்டனர்.

நேற்று காலை ஜப்பான் நேரம் 9 மணிக்கு சரியாக உண்ணாநிலை அறப்போராட்டம் தொடங்கியது.

டோக்கியோவில் இருக்கும் இந்திய தூதரகத்தில் நேற்று சகுரா கொண்டாட்டங்கள் நிகழ்ந்தமையால், இந்தியர்களும், ஜப்பானியர்களும் அங்கு திரண்டிருந்தனர். ஈழத்தமிழர்கள் 60 ஆண்டுகாலமாக அனுபவித்து வரும் துயரம் குறித்தும், 2009ல் ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை குறித்தும் பலகைகளில் எழுதி ஏந்தி நின்றனர் எமது போராட்டகாரர்கள். இது மிகப் பெரிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தமிழர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதம் காண்போரை உறையச் செய்தது.

2009 மே மாதம் நிகழ்ந்த இனபடுகொலை மற்றும் போர்குற்றங்கள் குறித்து, ஐக்கிய நாட்டு சபையின் மூலம் சுதந்திரமான முறையில் விசாரணை மேற்கொள்ளபட்டு, குற்றவாளிகள் தண்டிக்கபடவேண்டும். இந்த விசாரணைக்கு, இந்திய அரசாங்கம், முயற்சியெடுக்க வேண்டும்.

உலக நாடுகளின் மேற்பார்வையில், ஈழதமிழர்களிடையில் பொது வாக்கெடுப்பு எடுக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்யும் வகையில் சுய நிர்ணய உரிமை வழங்கபட வேண்டும். இதற்கான முயற்சிகளை இந்தியாவே முன்னெடுக்க வேண்டும்.

தமிழர்களின் பூர்வீக தாயகமான வடகிழக்கு பகுதியில் சிங்களர் குடியேற்றம் தடுத்து நிறுத்தபட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஜப்பான் தமிழர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இணையதளங்களில் வெளியான பாலசந்திரனின் புகைப்படமே என்னை இந்த போராட்டத்திற்க்கு அழைத்து வந்தது என்று போராட்டத்தில் கலந்து கொண்ட குழலி என்ற குடும்ப தலைவி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தொடர்ந்து இது மாதிரியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று சசி மற்றும் ரவிசந்திரன் வலியுறுத்தினார்கள்.

இயக்குநர் பி.வாசு பங்கேற்பு

புதிய திரைப்படத்திற்க்காக, லொகேசன் பார்க்க ஜப்பான் வந்திருந்த இயக்குனர் பி. வாசு, இந்தப் போராட்டம் குறித்து கேள்விப்பட்டு டோக்கியோ சென்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

English summary
82 young Tamil men had hunger strike campaign outside the High Commission of India in Tokyo on the 31st March 2013.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X