For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐந்து தலைமுறை கைமாறிய, 192 ஆண்டு பழமையான புனித வெள்ளி ‘பன்’

Google Oneindia Tamil News

World's oldest hot cross bun is 192 years old
லண்டன்: இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் வசிக்கும் நான்சி (94) என்ற பெண் 192 ஆண்டுகள் பழமையான ‘பன்' ஒன்றை பாதுகாத்து வருகிறார்.

நான்சியின் கொள்ளுத்தாத்தா வில்லியம் ஸ்கிம்னர் என்பவர் லண்டன் நகரில் 18-ம் நூற்றாண்டில் பேக்கரி நடத்தி வந்திருக்கிறார். அப்போது 1821-ம் ஆண்டில் புனித வெள்ளிக்கிழமை நினைவாக இந்த ‘பன்'ஐ தயாரித்துள்ளார்.

அன்று தொடங்கி அதை ஒரு நினைவுப் பொருளாக அட்டைப்பெட்டியில் வைத்து இந்த குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள். இது பற்றி நான்சி கூறுகையில், 'இதை எனது தாயாரிடம் இருந்து பெற்று பாதுகாக்கிறேன். இந்த புனிதமான மெதுரொட்டியை (பன்) புனித வெள்ளிக்கிழமை அன்று ஒரு நாள் மட்டுமே திறந்து பார்ப்போம். மற்ற நாட்களில் பெட்டிக்குள்ளேயே வைத்து விடுவோம்' என்கிறார்.

192 ஆண்டு காலம் ஆனாலும் இது பாதுகாப்பாக இருக்க எளிதில் செரிமானம் ஆகாத ஏதோ ஒரு பொருளைக் கொண்டு தயாரித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த பன்னிற்கு மேலும் பல சிறப்புகளும் உண்டாம். இதன் மேற்பரப்பில் சிலுவை அடையாளம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது 5 தலைமுறையினர் கைமாறி இருக்கிறது. இத்தனை காலம் ஆனாலும் மக்கி கெட்டுப்போகாமல், தயாரிக்கும் போது எப்படி நறுமணம் வீசியதோ அதே போன்றே இப்போதும் காட்சி தருகிறது.

English summary
Nancy Titman, 94, keeps the 192-year-old bun in a box and amazingly it still has a cross on the top and shows no traces of mould.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X