For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுக்கடைகளை வேறு இடங்களில் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்: ராமதாஸ்

Google Oneindia Tamil News

Ramadoss
சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்படும் டாஸ்மாக் மதுபான கடைகளை மாற்று இடங்களில் அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மதுவில்லாத, மகிழ்ச்சி நிறைந்த தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக பாமக கடந்த 24 ஆண்டுகளாக போராடி வருகிறது. இதற்காக பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தியிருக்கிறது.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் நடைபெறும் மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றிருப்பதற்கு நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகள் தான் காரணம் என்பதால், அவற்றை மூடும்படி ஆணையிடக்கோரி பா.ம.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மார்ச் 31ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. மதுக்கடைகளை அகற்றுவதற்கு கூடுதல் கால அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மார்ச் 31ம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் கண்டிப்பாக அகற்றப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதை மதுவில்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கும் முயற்சியில் கிடைத்த முதல் மற்றும் மிகப்பெரிய வெற்றியாக பாமக கருதுகிறது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504 மதுக்கடைகளும், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500க்கும் அதிகமான மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த சில மதுக்கடைகள் மட்டுமே மூடப்பட்டிருக்கின்றன. மற்ற மதுக்கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 35க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ள நிலையில் 3 கடைகளை மட்டுமே மூடியுள்ள அதிகாரிகள் மீதமுள்ள மதுக்கடைகளை தொடர்ந்து நடத்துகின்றனர்.

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைகளை அகற்றாத அதிகாரிகள், அடுத்த 12 நாட்களில் அவற்றை அகற்றிவிடுவதாக அந்த ஊர் மக்களிடம் உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்துள்ளனர். இவை நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகும்.
இன்னும் பல இடங்களில் மதுக்கடைகளின் பெயர்ப் பலகைகளை மட்டும் அகற்றிய அதிகாரிகள், மது விற்பனையை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றனர். நீதிமன்ற தீர்ப்புகளை செயல்படுத்துவதில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய தமிழக அரசே தீர்ப்பை மதிக்காமல், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளின் நிலைமை இப்படியென்றால், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500க்கும் அதிகமான மதுக்கடைகளை அகற்றுவதற்கான அறிகுறிகளே தென்படவில்லை. மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டிருக்கும் போதிலும், இது தொடர்பாக தங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்பை மதித்து மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும் உடனடியாக மூடவேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட மதுக்கடைகளை அந்தந்த பகுதிகளில் அமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது. இதுவும் தார்மீக அடிப்படையில் தவறாகும்.
சாலைகளில் மூடப்பட்ட கடைகள் மூடப்பட்டதாகவே இருக்க வேண்டும். அவற்றை வேறு இடங்களில் அமைக்கும் முயற்சியை அரசு கைவிடவேண்டும். அவ்வாறு செய்யாமல், மூடப்பட்ட கடைகளை வேறு இடங்களில் அமைக்க அரசு முயன்றால் அதை எதிர்த்து பாமகவினர் ஆங்காங்கே போராட்டம் நடத்துவார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss wants ADMK government to stop its effort to open the TASMAC shops closed in the highways in a different place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X