For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று தாக்கும் அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றி

Google Oneindia Tamil News

Nuclear capable Agni-II missile successfully test-fired
பாலசோர், ஒடிஷா:அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கி எதிரிகளின் நிலைகளை அழிக்கும் அக்னி 2 ஏவுகணை இன்று காலை வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.

ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே வீலர் தீவில் இந்த சோதனை இன்று காலை 10.20 மணிக்கு நடத்தப்பட்டது. சோதனை வெற்றிகரமாக இருந்ததாக பாதுகாப்புத்துறை வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

2000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து தாக்கி எதிரிகளின் நிலையை அழிக்கக் கூடிய வல்லமை பெற்றது அக்னி 2 ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது. நிலம் விட்டு நிலம் பாய்ந்து தாக்கும் இந்த ஏவுகணை சோதனை குறித்து டிஆர்டிஓ அதிகாரிகள் கூறுகையில், ஏற்கனவே அக்னி 2 ஏவுகணை ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது பயிற்சிக்கான பரிசோதனையாகும் என்றனர்.

20 மீட்டர் நீளம் கொண்ட அக்னி 2 ஏவுகணை 2 கட்டங்களைக் கொணட்தாகும். 17 டன் எடை கொணடது. இதில் 1000 கிலோ எடையுள்ள ஆயுதங்களை ஏற்றிச் சென்று தாக்க அனுப்பலாம்.

அக்னி வரிசையில் அக்னி 1 ஏவுகணை 700 கிலோமீட்டர் தூரம் பாயக் கூடியதாகும். அக்னி 3000 கிலோமீட்டர், அக்னி 4000 கிலோமீட்டர், அக்னி 5, 5000 கிலோமீட்டர் தூரம் வரை பாயக் கூடியது.

இதில் அக்னி 4, 5 ஆகியவை சோதனைக் கட்டத்தில் உள்ளன.அக்னி 6 ஏவுகணை உருவாக்க நிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The medium-range, nuclear capable Agni-II missile was today successfully test-fired with a strike range of more than 2,000 kms from the Wheeler Island off Odisha coast. "The trial of the surface-to-surface missile was conducted from a mobile launcher from the Launch Complex-4 of Integrated Test Range (ITR) at around 10.20 am," defence sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X