For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கல்லிடைக்குறிச்சியில் செல்போன் டவரில் ஏறி சமக நிர்வாகி போராட்டம்

Google Oneindia Tamil News

நெல்லை: கல்லிடைக்குறிச்சியில் செல்போன் டவரை அகற்றக் கோரி அதன் மேல் ஏறி நின்று போராட்டம் நடத்திய சமக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் தெற்கு ரதவீதியில் கடை கட்டிடத்தின் மேல் மாடியில் தனியார் செல்போன் டவர் உள்ளது. இந்த டவர் அரசு விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளதாகவும் அதனை அகற்றக் கோரியும் பொதுமக்கள், வியாபாரிகள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்நிலையி்ல் இதே பகுதியை சேர்ந்த நகர சமக துணை செயலாளரான கோமதி கணேசன் என்பவர் தெற்கு ரதவீதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி நின்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் இந்திரா, சாமிநாதன் மற்றும் போலீசார் சக்தி கணேசனை கீழே இறங்கி வருமாறு வேண்டுகோள் விடுத்தனர். அங்கு திரண்ட பொதுமக்கள் கணேசனை கீழே இறங்கி வருமாறு கேட்டுக் கொண்டனர். இதையடுத்து கணேசன் கீழே இறங்கி வந்தார். இதையடு்த்து போலீசார் அவர் மீது செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

English summary
Police arrested a SMK functionary for climbing a cellphone tower in Kallidaikurichi insisiting its removal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X