For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவூதியில் சட்டவிரோதமாக பணிபுரியும் வெளிநாட்டவருக்கு 3 மாத கெடு விதித்த மன்னர்

By Siva
Google Oneindia Tamil News

Saudi king orders three-month delay to illegal worker crackdown
ரியாத்: முரையான ஆவணங்கள் இன்றி சவூதியில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் உரிய ஆவணங்களைப் பெற 3 மாத கால அவகாசம் அளித்து சவூதி மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.

சவூதியில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் என வெளிநாட்டவர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சவூதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் வேலையின்றி உள்ளனர். இதையடுத்து அனைத்து நிறுவனங்களிலும் சவூதி மக்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்கும் சட்டம் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில் சவூதியில் விதிகளை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் கண்டறியப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 2 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் சவூதியில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தான் முறையான ஆவணங்கள் இன்றி சவூதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் 3 மாதத்திற்குள் உரிய ஆவணங்களைப் பெற கால அவகாசம் அளிக்கமாறு அந்நாட்டு மன்னர் அப்துல்லா உள்துறை அமைச்சகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சவூதி சட்டப்படி வெளிநாட்டவர்களுக்கு அவர்களின் முதலாளி தான் ஸ்பான்சராக இருக்க வேண்டும். பல வெளிநாட்டவர்கள் வேலையை மாற்றும்போது தங்கள் முகவரி குறித்த ஆவணங்களில் மாற்றம் செய்வதில்லை. தற்போது அரசின் கெடுபிடி அதிகரித்துள்ளதால் கடந்த சில நாட்களாக பலர் வேலைக்கு செல்லாமல் இருந்தனர்.

சவூதியில் கேரளாவைச் சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றுகின்றனர். அதனால் இந்த விவகாரம் குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

English summary
Saudi king Abdullah has given 3 months time to the migrant workers to sort out their papers else they will face deportation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X