For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜோக் சொன்னா சிரிக்கணும், ஜெயில்ல போடக்கூடாது...

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ‘ஏப்ரல் முட்டாள் ஜோக்' கூறிய பெண் போலீசில் சிக்கி தவித்த வேடிக்கை அமெரிக்காவில் நடந்துள்ளது.

ஏப்ரல் 1-ந் தேதி முட்டாள்கள் தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவதால் அன்றைய தினம் நண்பர்களை ஏமாற்ற பலர் அதிர்ச்சியூட்டும் ஜோக் சொல்லி நையாண்டி செய்வார்கள். அமெரிக்காவில் இவ்வாறு ஜோக் அடித்த ஒரு பெண்ணோ போலீசில் சிக்கி தவிக்க நேரிட்டது.

சூசன் ஹூஸ்சன் (வயது 52) என்ற பெண் தனது உறவினர் ஒருவரை ஏப்ரல் முட்டாளாக்கி, ஏமாற்றுவதற்காக, ‘என்னுடைய தங்கை தனது கணவரை கொலை செய்து விட்டாள். தடயங்களை அழித்து உடலை வீட்டின் பின்புறம் புதைத்து விட்டாள்' என்று கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அதிரடியாக சூசன் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இது ஏப்ரல் முட்டாள் தினத்திற்காக கூறிய ஜோக் என்பது தெரியவந்ததும் அவர் மீது வழக்கு எதுவும் போடாமல் விடுவித்தனர்.

சூசன் கூறும்போது, ‘ஒருவழியாக தப்பித்து விட்டேன். போலீசார் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்' என்றார்.

English summary
A woman was detained by police after she took an April Fools’ Day prank too far by joking she had shot and killed her husband.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X