For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

‘உள்ளத்தை அள்ளித்தா கவுண்டமணி' ஸ்டைல் ரயில் டிக்கெட் பரிசோதகர் சிக்கினார்!

Google Oneindia Tamil News

மும்பை: முபையில் போலி டிக்கெட் பரிசோதகர் போல் நடித்து, பயணிகளிடம் பணம் வசூலித்த நபர் போலீஸில் பிடிபட்டார்.

உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கவுண்டமணி ரயில், பஸ் என போலி டிக்கெட் பரிசோதகர் போல் நடித்து, பயணிகளிடம் நடித்து பணம் வசூலிப்பதைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம். ஆனால், அதுவே நிஜ வாழ்க்கையில் நடந்தால்..?

அபராதம்....

கல்யாணில் இருந்து மும்பை சி.எஸ்.டி. நோக்கி சென்ற மின்சார ரெயிலின் 2-ம் வகுப்பு பெட்டி ஒன்றில் வாலிபர் ஒருவர் தன்னை டிக்கெட் பரிசோதகர் என்று கூறி டிக்கெட் இன்றி பயணம் செய்த சிலரிடம் ரூ.100 வீதம் அபராதம் வசூலித்துள்ளார்.

டவுட் பாஸ்...

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பயணிகள் சிலர் இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த ரெயில் தானே ரெயில் நிலையத்திற்கு வந்தபோது தலைமை டிக்கெட் பரிசோதகருடன் சென்று ரெயில்வே பாதுகாப்பு படையினர் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

நீலச்சாயம் வெளுத்துபோச்சு... டும்.. டும்.. டும்

அப்போது, அவர் போலி டிக்கெட் பரிசோதகர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பயணிகளிடம் அவர் ஏமாற்றி பறித்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் டோம்பிவிலி பகுதியைச் சேர்ந்த ஹனுமான் ராம்ஜி சதோர்கர் என்பது தெரியவந்தது.

English summary
A fake ticket checker was arrested at Thane station by alert railway employees while he was extorting money from two teenagers on Friday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X