For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்

Google Oneindia Tamil News

Headmaster cleans toilet of the school
மதுரை: மாணவர்களை டீயுசன் படிக்க வற்புறுத்தும் ஆசிரியர்கள் மத்தியில், பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார் ஒரு தலைமை ஆசிரியர்.

கல்வியோடு சுத்தம், சுகாதாரம் என்பவற்றை போதிப்பதிலும், , எடுத்துக்காட்டாய் திகழ்கிறார், மதுரை ஞானஒளிவுபுரத்தை சேர்ந்த அய்யப்பன்நாயக்கன்பட்டி, கள்ளர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கில்பர்ட்.

இவர் தினமும் காலை பள்ளி துவங்கும் 9:30 மணி என்ற போதும், காலை, 8:00 க்கே பள்ளி வந்துவிடுகிறார். பின், வகுப்பறையில் பள்ளிக் குழந்தைகள் விட்டுச் சென்ற, காகிதங்கள் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இப்பணிக்காக, துப்புரவு ஊழியர் வரட்டும் என, காத்திருப்பது கிடையாது.மாலை, 4:00 மணிக்கு, பள்ளி முடிந்ததும், குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறையை, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்கிறார்.

இது பற்றி அவரிடம், சக ஆசிரியர்கள் கேட்டபோது, "நாம் பெற்றப் பிள்ளைகளுக்காக வீட்டில் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறோம். இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளும், நம் பிள்ளைகள் தான். குழந்தையும், தெய்வமும் ஒன்றல்லவா!' எனக் கூறுகிறார்.

இப்பள்ளியில் படிக்கும் எண்ணற்ற ஏழை குழந்தைகளை, சொந்த செலவில் படிக்க வைக்கிறார்.இதற்காக தனது சம்பளத்தில் மாதம் ஒரு தொகையை, குடும்ப பட்ஜெட்டில் இருந்து ஒதுக்குகிறார்.

இன்று சம்பளத்தை மட்டுமே கருத்தில் கொண்டு பணியாற்றும் பல ஆசிரியர்கள் மத்தியில் இவர் போன்று சேவை மனப்பான்மையோடு பணி புரிய மற்ற ஆசிரியர்களும் முன் வர வேண்டும் என்பதே இவரது கோரிக்கை.

English summary
The head master of Kallar primary school in ghanaolivupuram in Madurai district. He regularly cleaning the toilet in the school premises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X