உங்களுக்கு கேம்பிரிட்ஜ்தான் பெஸ்ட்.. ராஜீவ், சோனியாவை நாண வைத்த தாட்சர்!
லண்டன்: ராஜீவ் காந்தியும், சோனியா காந்தியும் லண்டனுக்கு வந்திருந்தபோது அவர்களை வரவேற்ற மார்கரெட் தாட்சர், இருவரும் கேம்பிரிட்ஜில் படித்தபோது காதலித்ததை மறைமுகமாக சுட்டிக் காட்டி பேசியபோது, ராஜீவும், சோனியாவும் சந்தோஷத்தில் நாணப்பட்டனராம்.
இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணியான மார்கரெட் தாட்சர் குறித்து நினைவு கூற எத்தனையோ சம்பவங்கள்.. 20ம் நூற்றாண்டின் மாபெரும் அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் தாட்சர்.
அவருக்கும், இந்தியாவுக்கும் கூட நிறைய தொடர்புகள் உள்ளன. நேரு குடும்பத்துடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர் தாட்சர்.
தாட்சர், ராஜீவ், சோனியா தொடர்பான சில சுவாரஸ்ய நிமிஷங்கள் குறித்த தொகுப்பு இதோ...

இரும்புக்குள் நகைச்சுவைக் கரும்பு...
தாட்சர் இரும்புப் பெண்மணியாக இருந்தாலும் நகைச்சுவை உணர்வு மிக்கவர். அதிலும் டைமிங்காக காமெடியாக பேசுவதில் அவர் கில்லாடி.

லண்டனுக்கு வந்த ராஜீவ், சோனியா
1985ம் ஆண்டுஅக்டோபர் மாதம் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், மனைவி சோனியாவும் லண்டன் வந்திருந்தனர். பிரதமர் தாட்சரை அவரது இல்லத்தில்சந்தித்துப் பேசினர்.

டின்னரில் கலாய்த்த தாட்சர்
ராஜீவ் தம்பதிக்கு டின்னர் கொடுத்து உபசரித்தார் தாட்சர். அப்போது வழக்கமான நகைச்சுவை இழையோட அவர் ராஜீவ் தம்பதியரிடம் வேடிக்கை செய்தார்.

கேம்பிரிட்ஜை விடவா...
டின்னரில் அமர்ந்திருந்த ராஜீவிடம் தாட்சர் கூறுகையில், நீங்களும் உங்களது மனைவியும் இந்த ஊருக்குப் புதியவர்கள் இல்லை. நன்கு அறிமுகமானவர்கள்தான். இங்கேதான் நீங்கள் முதன் முதலில் சந்தித்தனர். பழகினர். நட்பு கொண்டீர்கள், காதல் கொண்டீர்கள். உங்களுக்கு கேம்பிரிட்ஜ்தான் பொருத்தமான இடம். அதை விட பொருத்தமான இடம் வேறு உண்டா... என்றார் சிரித்தபடி.

வெட்கப்பட்ட ராஜீவ், சோனியா
தங்களது காதல் பிளாஷ்பேக்கை தாட்சர் சொன்னதும், ராஜீவுக்கும், சோனியாவுக்கும் வெட்கம் வந்து விட்டதாம். புன்னகைத்தபடி இருவரும் அமர்ந்திருந்தனராம்.

காதலிலிருந்து தீவிரவாதம் நோக்கி...
ராஜீவின் காதல் குறித்துப் பேசிய தாட்சர் அடுத்து சீரியஸ் விஷயத்துக்குத் தாவினார். குறிப்பாக தீவிரவாதம் குறித்து அவர் ராஜீவ் காந்தியிடம் சீரியஸாக விவாதித்தாராம்.

இந்திரா குறித்தும்
பிந்னர் இந்திரா காந்தி குறித்தும் ராஜீவிடம் பேசினார். இந்திராவின் மரணத்தைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி செயல்பட்ட விதம், அதை ஏற்றுக் கொண்டு மனதை திடப்படுத்திக் கொண்ட பக்குவம் குறித்தும் பாராட்டினாராம் தாட்சர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications