For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலி தலைவர்கள் யார்? யார்?.. அவர்கள் எங்கே?

By Mathi
Google Oneindia Tamil News

Surrendered LTTE leaders list released
யாழ்ப்பாணம்: 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் பலரது கதி என்ன? என்று தெரியாமல் இருந்து வருகிறது. இலங்கை அரசும் அவர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லை எனக் கூறி வருகிறது.

ஆனால் பொதுமக்கள் மற்றும் போராளிகள் முன்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளும் தலைவர்களும் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்திருக்கின்றனர். இதனால் இவர்கள் சரணடைந்ததை நேரில் பார்த்த பல நூறு சாட்சிகள் இருக்கின்றனர். இலங்கை ராணுவத்தின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட இந்த சாட்சிகள் வீடு திரும்பிய நிலையில் இந்த உண்மைகளை தற்போது வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் போராளிகள் முன்னிலையில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் யார்? யார் என்ற பட்டியல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் மற்றும் அவரது மகன், உதவியாளர் போராளி ஐங்கரன்
தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர். வெ.இளங்குமரன் (பேபி சுப்பிரமணியன்),மனைவி வெற்றிச்செல்வி மற்றும் மகள் அறிவுமதி
சமர்ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகி
தமிழீழ கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை
தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் கி.பாப்பா
தமிழீழ விளையாட்டுத்துறை துணைப் பொறுப்பாளர் ராஜா(செம்பியன்) அவரது மூன்று பிள்ளைகள்.
விடுதலைப்புலிகளின் இராணுவ செய்தித் தொடர்பாளர் இளந்திரையன்
தமிழீழ வைப்பகப் பொறுப்பாளர் வீரத்தேவன்
தமிழீழ அரசியல் துறையைச்சேர்ந்த கானகன்
தமிழீழ அரசியல் துறைதுணைப் பொறுப்பாளர் சோ.தங்கன்
தமிழீழ கல்விக்கழக பொறுப்பாளர்களில் ஒருவரான அருணா
தமிழர் புனர்வாழ்வுக்கழக துணை நிறைவேற்றுப் பணிப்பாளர் சொ.நரேன்
தமிழீழ போக்குவரத்துக்கழக பொறுப்பாளர் குட்டி
தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர் பிரியன் மற்றும் குடும்பம்
தமிழீழ நிர்வாக சேவை முன்னாள் பொறுப்பாளர் வீ.பூவண்ணன்
தமிழீழ நிர்வாசேவை பொறுப்பாளர்களில் ஒருவர் தங்கையா
தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவரான மலரவன்
தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவரான பகீரதன்
தமிழீழ மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் ரேகா
மணலாறு கட்டளைப் பணியகத் தளபதிகளில் ஒருவரான செல்வராசா
மணலாறு கட்டளைப் பணியக தளபதிகளில் ஒருவரான பாஸ்கரன்
தளபதி லோறன்ஸ்
தளபதி குமரன்
மட்டுமாவட்ட தளபதிகளில் ஒருவரான பிரபா
வழங்கப்பகுதி பொறுப்பாளர் ரூபன்
நகைவாணிபங்களின் பொறுப்பாளர் பாபு
திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன்
யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி
அரசியல்துறை நிர்வாகப் பொறுப்பாளர் விஜிதரன்
தளபதிகளில் ஒருவரான வீமன்
வனவள பாதுகாப்புப்பிரிவு பொறுப்பாளர் சக்தி குடும்பம்
சிறுவர் இல்லங்களின் பொறுப்பாளர் இ.ரவி
முள்ளியவளைக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சஞ்சை
நீதி நிர்வாகப் பொறுப்பாளர் பரா
ராதா வான்காப்புப் படையணி பொறுப்பாளர்களில் ஒருவர் குமாரவேல்
மணலாறு மாவட்ட கட்டளைத்தளபதி சித்திராங்கன்
மாலதி படையணித் தளபதிகளில் ஒருவரான சுகி
கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான அருணன்
மருத்துவப் பிரிவைச் சேர்ந்த மனோஜ்
நிதித்துறையைச் சேர்ந்த லோறன்ஸ்

உள்ளிட்ட மேலும் பலரும் சரணடைந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. இவர்களது நிலைமை என்ன எனத் தெரியவில்லை.

English summary
Eelam Tamil movements now released the list of Surrenderd LTTE leaders to Sri lankan Army during the final war time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X