For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரக்கோணம் ரயில் விபத்து எதிரொலி-கோவை, பெங்களூர், திருவனந்தபுரம் ரயில்கள் ரத்து!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அரக்கோணம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவை, பெங்களூர், திருவனந்தபுரம் செல்லக் கூடிய 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பீகார் மாநிலத்திலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணத்தை அடுத்த சித்தேரி அருகே தடம் புரண்டது. 9 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இடம்பெயர்ந்ததில் 4 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படக் கூடிய

சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயில் (12695),

கோவை செல்லும் தூரந்தோ ரயில்

சென்னை-கோவை விரைவு எக்ஸ்பிரஸ் (12675)

சென்னை-பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் (12639)

சென்னை- பெங்களூரு ரயில் (12609)

சென்னை- மங்களூரு

சென்னை-கோவை இன்டர்சிட்டி

ஆகிய 7 ரயில்களும் நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அரக்கோணம் ரயில் விபத்து - தகவல் அறிய, டிக்கெட் கட்டணத்தை பெற சிறப்பு வசதி

அரக்கோணம்: அரக்கோணம் அருகே நடந்த ரயில்விபத்து தொடர்பான தகவல்களைப் பெறவும், ரத்தான ரயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தைத் திரும்பப் பெறவும் சிறப்பு வசதிகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அரக்கோணம் ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்ட 8 ரயில்களின் டிக்கெட் கட்டணமும் முழுவதுமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு மையம் ஒன்றையும் ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. விபத்து குறித்து தகவல்கள் பெற 9244919572 என்ற செல்போன் எண்ணையும், 044-25357398, 044-25330823 உள்ளிட்ட தொலைப்பேசி எண்களையும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

English summary
9 coaches of a passenger train derailed in Tamil Nadu this morning killing at least 4 persons. The accident has affected rail traffic on the Arakkonam junction. Several trains coming from Chennai - like the Kovai Express, the Duronto Express, the Bangalore Express and the Brindvan Express - have been cancelled
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X