For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் மாணிக்க விநாயகம் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி ரத்து

By Shankar
Google Oneindia Tamil News

Manikka Vinayagam's programme in Sri Lanak cancelled
சென்னை: தமிழுணர்வாளர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இலங்கையில் தான் கலந்து கொள்ளவிருந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டதாக பின்னணி பாடகர் மாணிக்க விநாயம் தெரிவித்துள்ளார்.

இலங்கை வவுனியாவில் புதிதாக அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழாவில் இசை கச்சேரி நடத்த சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உள்ளிட்ட 25 பேர் இலங்கை செல்ல இருந்தனர்.

இதற்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருவான்மியூர் சாஸ்திரி நகரில் உள்ள மாணிக்க விநாயகம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர். பாடகர்கள் இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டார்கள்.

மாணிக்க விநாயகத்திடம் இலங்கை செல்ல வேண்டாம் என வற்புறுத்தி மனுவும் கொடுத்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மாணிக்க விநாயகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ் உணர்வாளர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து 11-ந்தேதி (நாளை) இலங்கை வவுனியாவில் உள்ள கோவிலில் கும்பாபிஷேக விழாவினையொட்டி நடைபெற இருந்த இசை நிகழ்ச்சிக்கு நானும், மற்றவர்களும் யாரும் செல்லவில்லை என்பதையும், எங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டோம் என்பதை யும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.

English summary
Singer Manikka Vinayagam's music programme in Sri Lanka has been cancelled due to Tamil activists protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X