For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை போராடுவோம்... வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நெல்லை: "ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை எனது போராட்டம் தொடரும்" என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள மேலநீலிதநல்லூரில் செவ்வாய்கிழமை இரவு முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சிங்கபுலி பாண்டியன் ஓராண்டு நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய வைகோ கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலை அதிபர் அனில் அகர்வால் பல தலைவர்களை அசைத்து பார்த்துவிட்டாலும், அசைக்கமுடியாத ஆள் நான் ஒருவன்தான். வைகோவிடம் நெருப்பு கூட அண்டமுடியாது. ஆலையை மூடும்வரை என் போராட்டம் தொடரும்.

We will protest against the Sterlite till the end, says Vaiko
ஆலையை மூட உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் ஆலை தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டாலும், மார்ச் 30ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையை உச்ச நீதிமன்ற தீர்ப்பு கட்டுப்படுத்தாது என்பதால் தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்திருக்கிறது.

இதில் என்னையும் மனுதாரராக ஏற்றுக்கொள்ளும்படி நீதிபதி சொக்கலிங்கத்திடம் வேண்டுகோள் வைத்தேன். நீண்ட காலமாக போராடிவருவதை கருத்தில் கொண்டு உங்கள் மனுவை ஏற்றுக்கொள்வதாகவும், உங்கள் மனுவை விரைந்து அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் அதற்கான பணிகளை முடித்துவிட்டு கூட்டத்திற்கு வந்திருக்கிறேன்.

முதல்வருக்கு நன்றி

மார்ச் 23ஆம் தேதி சட்டமன்றத்தில் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு கோரி தீர்மானம் இயற்ற வேண்டும் என அறிக்கை வெளியிட்டுருந்தேன். 29ஆம் தேதி தமிழக முதல்வர் தீர்மானம் நிறைவேற்றிருக்கிறார். அதற்காக முதல்வருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தேன். நல்லது செய்தால் பாராட்டுவோம்.

திருமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரித்தேன், நாளையும் ஆதரிப்பேன் என்று சொன்னேன். அப்போதெல்லாம் கடைகளில் புளி என்று சொல்லக்கூட பலரும் பயந்தார்கள். இன்று அனைத்து தலைவர்களும் ஆதரிப்பதுகண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மாணவர்கள் களத்தில் போராடுகிறார்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு வைகோ பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ப.அ.சரவணன், எஸ்.பெருமாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, மாணவர் அணி செயலாளர் தி.மு.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

English summary
MDMK general secretary Vaiko said that he and his party will protest against the Sterlite industires till its doors are shut.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X