For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புற்று நோய்க்கு புதிய சிகிச்சை:கனடா இந்திய மாணவன் சாதனை

Google Oneindia Tamil News

ஒட்டாவா: புற்று நோய்க்கு புதிய சிகிச்சை முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார் கனடா இந்திய மாணவன் அர்ஜூன் நாயர்.

கனடாவில் பள்ளியில் படித்துவரும் அர்ஜூன் நாயர் (16) என்ற மாணவன் நுண்ணுயிர் எதிரிகளை ஒன்று சேர்த்து சிறிய மாற்றங்களுடன் புற்று நோய் சிகிச்சைக்கு ஒரு புதிய சோதனை ஒன்றை செய்துள்ளார். இதனை மூத்த விஞ்ஞானிகள் குழுவும் வரவேற்றுள்ளனர்.

கேன்சர் போட்டோதெர்மல் சிகிச்சை என்ற இந்த புதிய முறையின் மூலம் நோயாளியின் உடம்பில் தங்கத்துகள்கள் செலுத்தப்படுகிறது. பின்னர் அது ஒரு கட்டியைபோன்று ஒன்றுதிரள்கிறது. அப்போது ஒளியை பாய்ச்சி கேன்சர் செல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்த முறை பயனுள்ளதாக இருந்தாலும், மிகுந்த பயனுள்ளதாக அமையவில்லை. கேன்சர் செல்கள் தாக்கப்படுகிறதுபோது, வெப்ப அதிர்ச்சி புரதங்கள் அங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

எப்படியோ, கேன்சர் செல்கள் அதிகரிப்பதை தடுக்க முடியும் என்பதால் இந்த முறை மிகவும் பயனுள்ள ஒரு முறையாக உருவாகும் என்று கருதப்படுகிறது. இதனால் இரண்டு வருடங்களாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவன் அர்ஜூன் நாயருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

English summary
A Canadian high school student has improved an ineffective experimental cancer therapy with a simple tweak pairing it with antibiotics earning accolades Tuesday from a panel of eminent scientists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X