For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசிய நாடாளுமன்றத்துக்கு மே 5ம் தேதி தேர்தல்

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றத்துக்கு வரும் மே 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என மலேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் கடந்த 56 ஆண்டுகளாக தேசிய முன்னணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. பிரதமர் நஜீப் ரசாக்கின் மந்திரி சபையில் துணை பிரதமராக பதவி வகித்த அன்வர் இப்ராகீம் பிரதமருடன் சமீப காலமாக மோதல் போக்கை கடைபிடித்தார்.

இதனையடுத்து, நாடாளுமன்றத்தை கலைத்து மலேசிய மன்னர் அப்துல் ஹலீம் கடந்த 3ம் தேதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், மலேசிய நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது.

இம்மாதம் 20ம் தேதி வரை வேட்பு மனு தாக்கலும், 15 நாட்கள் பிரசாரத்திற்கு பிறகு மே மாதம் 5ம் தேதி பொதுத் தேர்தலும் நடைபெறும் என்று மலேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அஜீஸ் யூசுப் இன்று தெரிவித்தார்.

English summary
Malaysia on Wednesday announced a general election for May 5, setting a long-awaited date for polls tipped to be its closest ever as the long-ruling government seeks to hold off a surging opposition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X