For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் சிக்கியுள்ள ஈழத் தமிழர்களை இலங்கைக்கு அனுப்ப திருமா எதிர்ப்பு

Google Oneindia Tamil News

சென்னை: துபாயில் சிக்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திலிருந்து படகில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும்போது படகு பழுதாகி தற்போது துபாயில் தங்கியிருக்கும் லோகினி ரதிமோகன் உள்ளிட்ட 19 ஈழத் தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது. அவர்களைப் பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அவர்களை இன்று துபாய் அரசு இலங்கைக்குத் திருப்பி அனுப்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இந்திய அரசு விரைந்து செயல்படவேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டிலிருந்து படகில் சென்றபோது படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த ஈழத் தமிழர்கள் 46 பேரில் 7 பேர் ஏற்கனவே இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார்கள். மீதமுள்ளவர்களில் 20 பேருக்கு அமெரிக்காவும், சுவீடனும் புகலிடம் வழங்கியுள்ளன . எஞ்சியிருக்கும் 19 பேரையும் இலங்கைக்குத் திருப்பியனுப்ப துபாய் அரசு முடிவு செய்திருக்கிறது.

அவர்களைத் திரும்பவும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், அகதிகளுக்கான ஐ.நா அமைப்பும் (யூ.என்.எச்.சி.ஆர் ) வலியுறுத்தியுள்ளன .இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ள 19 பேரில் லோகினி ரதிமோகன் என்ற இளம் பெண்ணும் ஒருவராவார். அவர் ஈழத்தில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.

ஏற்கனவே அவ்வாறு செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப்பிரியா கொடூரமான முறையில் இலங்கைப் படையால் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கும் நிலையில் லோகினியை இலங்கைக்கு அனுப்புவது தெரிந்தே அவரைக் கொலைக்களத்துக்கு அனுப்புவதற்கு ஒப்பாகும். எனவே இந்திய அரசு இதில் தலையிட்டு அந்த ஈழ அகதிகள் அனைவரையும் இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்துக்குப் பிறகும்கூட இலங்கை அரசு தன்னை திருத்திக்கொள்ள எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக அந்தத் தீர்மானத்தைக் கேவலப்படுத்தும் விதமாகவே நடந்துகொள்கிறது. எல்.எல்.ஆர்.சி பரிந்துரைப்படி அமைக்கப்பட்ட ராணுவ நீதிமன்றம் இப்போது வழங்கியிருக்கும் தீர்ப்பு அதற்கொரு உதாரணமாகும். இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு தாங்கள் பொறுப்பல்ல என அது கூறியிருக்கிறது. இந்தச் சூழலில் ஈழத் தமிழ் அகதிகளை மீண்டும் அவர்களது விருப்பத்துக்கு மாறாக இலங்கைக்கு அனுப்புவது எவ்விதத்திலும் நியாயமாகாது. இதை உணர்ந்து ஈழத் தமிழ் அகதிகள் 19 பேரையும் காப்பாற்ற இந்தியா முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
VCK leader Thirumavalavan has urged the Indian govt to stop the deportation of 19 Lankan refugees from Dubai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X