For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் மகனை எனக்குக் கொடுங்கள்: முதல்வருக்கு பேரறிவாளன் தாயார் கோரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Perarivalan
சென்னை: தன் மகனின் தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரிடம் மனு அளித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவிற்கு பேரறிவாளன் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தில் புல்லர் வழக்கில் அவருக்கு மரண தண்டனை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது தனக்கு பயத்தையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளில் மரண தண்டனைக்கு தடை விதித்துள்ள நிலையில், அகிம்சாவாதியான காந்தியடிகள் பிறந்த இந்தியாவில் தடை விதிக்காதது வேதனையளிக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் மரண தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரிடம் மனு அளித்து தனது மகனை தன்னிடம் ஒப்படைக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்திலாவது மரண தண்டனையை ஒழிக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டு, இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக ஆக்க வேண்டும் என்றும் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Rajiv Gandhi killer Perarivalan mother Aruputhammal has pleaded TN CM Jayalalitha to save her son from the noose. She has urged the government of Tamil Nadu to move a resolution in the assembly in this regard.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X