For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாண்டியன் எக்ஸ்பிரஸ் என்ஜினில் கோளாறு: தென் மாவட்ட ரயில்கள் தாமதம்

By Chakra
Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் இருந்து புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அந்த பயில் வாடிப்பட்டியிலேயே நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை சென்ற ரயில்கள் அனைத்தும் 2 மணி நேரம் தாமதமாக சென்றன.

மதுரையில் இருந்து இரவு 8.40 மணிக்குப் புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜினில் இரவு 9 மணியளவில் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த ரயில் வாடிப்பட்டி ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. வாடிப்பட்டி ரயில் நிலைய ஊழியர்களால் என்ஜின் கோளாறை சரி செய்ய முடியவில்லை.

இதையடுத்து மதுரையில் இருந்து மாற்று ரயில் என்ஜின் வாடிப்பட்டிக்கு புறப்பட்டு வந்தது. அந்த என்ஜினை பொருத்தி பாண்டியன் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து கிளம்ப 2 மணி நேரம் ஆகிவிட்டது.

இந்தப் பிரச்சனை காரணமாக, முத்துநகர், நெல்லை, பொதிகை, ஆனந்தபுரி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் 2 மணி நேரம் தாமதமாக சென்னை வந்தடைந்தன.

English summary
Chennai bound Pandian express train's engine has techical fault near Vadipatti and the engine was replaced before it proceed Chennai journey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X