2 யூனிட்டுகளில் பாய்லர் ரிப்பேர்.. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி: தமிழகத்தின் மின் உற்பத்தியில் அரசுக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இங்கு 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் மூலமாக நாள்தோறும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சிறந்த செயல்பாட்டிற்காக ஐ.எஸ்.ஓ தரச்சான்று உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சமீபகாலமாக தொடரும் தீ விபத்துக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதாவது கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அனல் மின் நிலையத்தின் கன்வேயர் பெல்ட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அனல் மின் நிலையத்தின் பழுதுகள் சரிசெய்யப்பட்ட நிலையில் அனல் மின் நிலையம் சீராக இயங்கி வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை அனல் மின் நிலையத்தின் முதல் மற்றும் 3ம் யூனிட்டின் பாய்லர் பழுது காரணமாக மின் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவும் நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலைய பாய்லர் பழுதால் மின் வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முதல் மற்றும் மூன்றாவது யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications