For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாவட்டந்தோறும் வாஸ்து முறைப்படி அதிமுக அலுவலகங்கள்… ஜெ. உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அ.தி.மு.க-வின் அனைத்து மாவட்டக் கழகத்திலும் சொந்தமாக புதிய அலுவலகம் இருக்க வேண்டும் என்று முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ளது. இதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளது. இந்தியா முழுவதும் கூட்டணி பற்றியும், மூன்றாவது அணி பற்றியும்தான் பேசி வருகின்றனர் அரசியல் கட்சிகள்.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக போன்ற கட்சிகள் செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்ட ஆரம்பித்துவிட்டனர்.

இதை விட ஒருபடி மேலே யோசிக்க ஆரம்பித்துவிட்ட அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாவட்டந்தோறும் கட்சி அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறாராம்.

தேர்தல் பிர​சாரத்துக்காக முதல்வர் ஜெயலலிதா அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்ளும் போது அந்தந்த மாவட்டத் தலை​நகரங்களில் புத்தம்புதிதாகக் கட்டப்பட்ட அலுவலகங்களுக்கு திறப்பு விழா நடக்கவேண்டும் என்றும் கூறியுள்ளாராம்.

வாஸ்து அவசியம்

அதிமுக அலுவலகங்கள் வாஸ்துபடி கட்டவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அலுவலக முகப்பு வடக்கு அல்லது கிழக்கு பார்த்ததாக அவை அமைய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
CM and AIADMK general secratary has ordered to build own party head offices in all distriticts as per vasthu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X