For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஸ் பிரியாணியில் (பழையசோறு) இருக்கு வைட்டமின்ஸ்...: விஞ்ஞானிகள் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: காலை உணவுக்கு பழையசோறு (கஞ்சி) சாப்பிடுவது உடல்ஆரோக்கியத்திற்கு பலவகைகளிலும் நல்லது என்பதுஅமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

முன்பெல்லாம் இரவு சாப்பாடு முடிந்துஎஞ்சியுள்ள சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்துவிடுவார்கள். மறுநாள் காலையில் சற்றுபுளித்த சுவையுடன் நுரைதள்ளிய நிலையில் பழைய சோறுதயாராகிவிடும்.

பழைய சோறுதண்ணீரில் சிறிது உப்புபோட்டுக் குடிப்பதை வீட்டில்உள்ள பெரியவர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள். உடல்சூட்டை தணித்துவிடும் ஆற்றல் இந்த தண்ணீருக்கு உண்டு.

கால மாற்றம், நாகரீகம்ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் பழைய சோறு இருந்த இடத்தை இப்போது இட்லி,தோசை, பூரி, சப்பாத்தி, நூடுல்ஸ்போன்ற உணவுகள்ஆக்கிரமித்துவிட்டன.கிட்டத்தட்ட அனைத்துவீடுகளிலும் இப்போது எல்லாம் இரவு கூட டிபன்தான். எனவே,மறுநாள் காலையில் பழையசோறு சாப்பிடுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

Porridge
ஓல்ட் இஸ் கோல்ட்..

இந்த நிலையில், பழையசோறு என்றும், கஞ்சி என்றும் நாமெல்லாம் உதாசீதனப்படுத்திய அந்த மகத்தான உணவின்மகத்துவத்தையும், பல்வேறுவிதமான பயன்பாடுகளையும்அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு மூலம்கண்டுபிடித்துள்ளனர்.

வாவ்... இவ்வளவு சத்தா..?

தென்னிந்தியர்கள் காலை உணவாக பயன்படுத்தும்பழைய சோற்றில் உடல்ஆரோக்கியத்திற்கு தேவையான இவ்வளவு சத்துகள்அடங்கி உள்ளனவா? என்றுவியந்து போனார்களாம்.

ஆய்வு என்ன சொல்லுதுனா...?

பழைய சோறு, காலைஉணவுக்கு மிகவும் பொருத்தமான உணவு ஆகும்.

அரிய வைட்டமின் இருக்கு...

மற்றஉணவு பதார்த்தங்களில் இல்லாத வகையில் பழையசோற்றில் அரிய வைட்டமின்களான பி6, பி12 ஆகியவைமிகுதியாக காணப்படுகிறதாம்.

நோய் எதிர்ப்பு காரணி.....

பழைய சோற்றில் உருவாகும்கோடிக்கணக்கான நல்லதன்மை கொண்ட பாக்டீரியாக்கள் உணவு செரிமானத்திற்குபெரிதும் உதவும். அதில் நோய்எதிர்ப்பு மற்றும் நோய்தடுப்புக்கான காரணீகள்ஏராளமாக உள்ளன.கஞ்சி சாப்பிடுவதால்சிறுகுடலில் உருவாகும்பாக்டீரியாக்கள் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பதுடன்அவற்றை நோய் உண்டாக்கும்கிருமி களை எதிர்க்கும்வகையில் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கின்றன.

ஏஜ் மிராக்கிள்...

காலை உணவாக சாப்பிடும்பழைய கஞ்சி எளிதில் ஜீரணமாகிவிடும். அது வயது முதிர்ந்ததோற்றத்தையும், எலும்புசம்பந்தப்பட்ட நோய்களையும் நீக்கும். ஜீரணம் தொடர்பானஎந்த பிரச்சினையும் வராது.

கோடைக்கு ஏத்த உணவு...

சூடுதணிந்து உடம்பு குளிர்ச்சி யாக இருக்கும். பழைய சோறு நார்ச்சத்து கொண்டதாக இருப்பதால் மலச்சிக்கல்பறந்துவிடும். மந்தநிலை போய்உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் பழையசோறுக்கு உண்டு. உடலில்சோர்வே ஏற்படாது.

எனர்ஜி டானிக்...

பழைய சோறு சாப்பிட்டால் அன்றைய நாள்முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். சோர்வு அண்டாது.அனைத்து விதமான ஒவ்வாமைகளும், தோல் சம்பந்தப்பட்டநோய்களும் காணாமல்போய்விடும். எந்தவித அல்சரும் நெருங்காது. உடல் இளமையாகவும், தோற்றப்பொலிவுடனும் இருக்கும்.மேற்கண்ட தகவல்களைஅமெரிக்க விஞ்ஞானிகள்தங்கள் ஆய்வில் கண்டறிந் துள்ளனர்.

கல்சட்டி சோறு...

மண்பானையில்தண்ணீர் ஊற்றி செய்யப்படும்பழைய சோறு இன்னும் அதிகசுவையுடன் மணம் கொண்டதாக இருக்கும். இன்றும்கிராமப்புறங்களில் கல் சட்டிஎன்று சொல்லப்படும் மண்பானையில்தான் பழைய சோறுபோட்டுவைப்பார்கள்.பல வீடுகளில் தலைமுறைதலைமுறையாக பயன்படுத்தப்பட்டு வரும் கல்சட்டிகள்கூட இருக்கத்தான் செய்கின்றன.

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டாண்டா...

பழைய சோறுக்கு சம்பாஅரிசிதான் மிகவும் ஏற்றதுஆகும். காரணம், அதில்ஏராளமான ஊட்டச்சத்துகளும்தாதுபொருட்களும் அடங்கிஉள்ளனவாம். எப்போதுமே நம்மவர்கள்சொல்வதை நம்பாமல் வெளி நாட்டினர் கூறுவதை அப்படியேவேதவாக்காக கருதுவது நமதுவழக்கம். இப்போது வெளிநாட்டுவிஞ்ஞானிகளே பழையசோற்றின் மகத்து வத்தைசொல்லிவிட்டார்கள்.

English summary
Eating a bowl of porridge each morning may not be the best way to shift unwanted pounds. American Scientists say calorie labelling has for years ignored the energy content of fibre. This means that dieters have been ‘unknowingly' eating more calories than they thought in their porridge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X