For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'இசட்' பிரிவு கமாண்டோ பாதுகாப்புக்கு மாதம் ரூ. 15 லட்சம் அம்பானியே தருவாராம்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: 'இசட்' பிரிவு கமாண்டோக்களுக்கு மாதம் 15லட்சம் சம்பளமாக அம்பானியே தருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடிக்கு ஆதரவாக செயல்படும் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானிக்கு எதிராக தாக்குதல் நடத்துவோம் என்று இந்திய முஜாஹிதின் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இதனை அடுத்து மத்திய அரசு, முகேஷ் அம்பானிக்கு நாட்டின் பெருந்தலைவர்களுக்கு வழங்கப்படும் இசட் பிரிவு பாதுகாப்பை வழங்கியது.

Mukesh ambani
இதற்கு இடது சாரிகள், நாட்டில் பாமர பெண்கள் பாதுகாப்பின்றி பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிறபோது, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானிக்கு நாட்டின் உயரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது முன் எப்போதும் இல்லாத ஒன்று என விமர்சித்தனர்.

இதற்கு மத்திய அரசு, நாட்டின் ஒரு முக்கிய தொழிலதிபருக்கு வந்த மிரட்டலை அடுத்து அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இருந்தும், அந்த கமாண்டோ பிரிவு பாதுகாவலர்களுக்கான செலவுகளை அம்பானியே ஏற்பார் என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில், 'இசட்' பிரிவு கமாண்டோக்களுக்கு மாதம் சம்பளமாக 15 லட்சம் தர தயார் என அம்பானி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Reliance Industries Ltd (RIL) chairman Mukesh Ambani will have to pay for his 'Z' category security, with Union home ministry sources disclosing that the CRPF has been asked to deploy its men for his proximate protection "on a payment basis". Sources indicated that the monthly bill for Ambani's 'Z' category security detail may work out to around Rs 15 lakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X