For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக சட்டசபை தேர்தல்: ராய்ச்சூரில் இருந்து பிரச்சாரத்தை துவங்கிய ராகுல் காந்தி

By Siva
Google Oneindia Tamil News

Rahul starts campaigning in Karnataka
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று ராய்ச்சூரில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்கினார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்கின்றனர்.

ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தை இன்று முதல் துவங்குகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று கர்நாடகா வந்த அவர் ராய்ச்சூரில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.

ராய்ச்சூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அவர் இன்று பிஜப்பூர் மாவட்டத்திலும் பிரச்சாரம் செய்கிறார். இதைத் தொடர்ந்து அவர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 28ம் தேதிக்கு பதில் வரும் 26ம் தேதி கோலார், தும்கூர், ஹவோியில் பிரச்சாரம் செய்கிறார்.

மே மாதம் 1ம் தேதி மாண்டியா, ஹாசன், ஷிமோகா மாவட்டங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார் ராகுல். சோனியா காந்தி வரும் 25ம் தேதி சிக்மக்லூர் மற்றும் மங்களூரில் பிரச்சாரம் செய்கிறார். பிரதமர் மன்மோகன் சிங் வரும் 29ம் தேதி ஹூப்ளி, தார்வாட் மற்றும் பெங்களூரில் வாக்கு சேகரிக்கிறார்.

English summary
Congress vice-president Rahul Gandhi has started his election campaign in Raichur ahead of the Karnataka assembly election. He is gathering votes at Bijapur district on tuesday. He will campaign at Kolar, Tumkur and Haveri districts on 26.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X