For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பச்சைப் பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: பச்சைப்ப பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம்.

மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. மீனாட்சித் திருக்கல்யாணம், தேரோட்டம், அதைத் தொடர்ந்து வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் பிரசித்தி பெற்றதாகும்.

வைகை ஆற்றில் இறங்குவதற்காக செவ்வாய்க்கிழமை மாலை அழகர் மலையில் இருந்து தங்கப்பல்லக்கில் கிளம்பினார் அழகர். நேற்று காலை மதுரை வந்த அழகருக்கு மூன்று மாவடி அருகே எதிர்சேவை நடைபெற்றது.

ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் இளைப்பாறிய அழகருக்கு விடிய விடிய பக்தர்கள் சர்க்கரைக் கிண்ணத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரவேற்பு கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் தங்கிய அழகருக்கு விடிய விடிய திருமஞ்சனம் நடைபெற்றது. அங்கிருந்து இன்று காலையில் பச்சைப் பட்டுடுத்தி ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளி, ஆகியவற்றை அணிந்து கொண்டு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார் கள்ளழகர். வழிநெடுகிலும் காத்திருந்த பக்தர்கள் கோவிந்த முழக்கமிட்டு வரவேற்றனர். மதுரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைத்து கள்ளழகரை வரவேற்றார்.

வைகை ஆற்றில் அழகர் இறங்குவதைக் காண காத்திருந்த பக்தர்கள் ஆடி அசைந்து வந்த அழகருக்கு விசிறி விட்டும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் வெப்பம் தணித்தனர். இதனைத் தொடர்ந்து காலை 7.45 மணிக்கு ஆற்றில் இறங்கினார் அழகர். பச்சைப் பட்டுடுத்தி அழகர் இறங்கினால் மழை வளம் பெருகி, தானியங்கள் நன்றாக விளையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

<center><center><center><center><center><img style="-webkit-user-select:none;border:0px;" border="0" width="1" height="1" src="http://web.ventunotech.com/beacon/vtpixpc.gif?pid=2&pixelfrom=jp" /> <div id="vnVideoPlayerContent"></div> <script> var ven_video_key="MTMwODg5fHwyfHwxfHwxLDEsMQ=="; var ven_width="650"; var ven_height="417"; </script> <script type="text/javascript" src="http://ventunotech.com/plugins/cntplayer/ventuno_player.js"></script></center></center></center></center></center>

கள்ளழகரைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்திருந்தனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதேபோல் வைகை ஆறு ஓடும் மானாமதுரை, வாடிப்பட்டி ஆகிய ஊர்களிலும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

English summary
Devotees from Madurai and the southern districts gathered in lakhs occupying the Vaigai riverbed and every available space in the vicinity, rooftops, Albert Victor Bridge and nearby buildings to have a bird's eye view of the grand entry of Lord Kallazhagar into the river in the early hours of Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X