For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உச்ச நீதிமன்ற தீர்ப்பு கட்டுப்படுத்தாது…. அணு உலை மூடும் வரை போராடுவோம்: உதயகுமார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

We will not accept SC verdict, says Udayakumar
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின்நிலையம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களை கட்டுப்படுத்தாது என்று அணு உலைக்கு எதிரான மக்கள் சக்தி இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார். அணு உலை மூடும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கூடங்குளம் திட்டத்துக்கு தடை இல்லை என திங்கட்கிழமையன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் அணு உலைக்கு எதிரான மக்கள் சக்தி இயக்கத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்த தீர்ப்பு சட்டப்படி எங்களை கட்டுப்படுத்தாது. நாங்கள் தீர்ப்பை ஏற்று கொள்ளவில்லை.

தரமில்லாத கட்டுமானங்கள், கொதிகலங்கள் இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட இந்த அணுமின் நிலைய வளாகத்தில் பல ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. தரமற்ற கேபிள் இணைப்புகளால் மின்கசிவு, வாயு கசிவு ஏற்பட்டு 6 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

சுற்றுச்சூழல் மாசு

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மன்னார் வளைகுடா பகுதியே மாசுபடும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதன் பின்னரும் அணு கழிவுகள் எங்கே புதைப்பது, அதிலிருந்து வெளியாகவும் அணுவீச்சின் தன்மை என்ன என்பதை தெரிவிக்காமல் உள்ளனர். இந்த பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது எந்த அளவு ஏற்படும், இதற்கு அரசின் செயல்பாடு, இழப்பீடு என்ன என்பது குறித்து தீர்ப்பில் சொல்லப்படவில்லை. அணுமின் நிலையம் மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு உதயகுமார் கூறினார்.

English summary
Anti KKNPP movement leader SP Udayakumar has said his team will not accept the SC verdict on Kudankulam plant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X