For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுக்குப் போனால் ஜாக்கிரதை.. குடிமக்களை எச்சரிக்கிறது பாகிஸ்தான்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: இந்தியாவில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் இந்தியப் பயணத்தின்போது மிகவும் கவனமாக இருக்குமாறு தனது நாட்டு மக்களை பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுக்குப் போக திட்டமிட்டால் அங்கு கூடுதல் கவனத்துடன் இருக்கும்படி பாகிஸ்தானியர்களை பாகிஸ்தான் அரசு அறிவுறுத்துகிறது. அங்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவுகிறது. எனவே இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

அஜ்மீர் தர்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளவுள்ள 600 யாத்ரீகர்கள் மி்குந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அவர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் நேரிடும் வாய்ப்பு இருப்பதாக இந்திய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளதால் கூடுதல் கவனத்துடன் அவர்கள் இருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Pakistan today advised its citizens travelling to India to exercise "due caution" following reports that their security "may be in jeopardy". "The Government of Pakistan wishes to advise its citizens who are planning to travel to India to exercise due caution and care while travelling to various parts of India," said a statement issued by the Foreign Office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X