கேரள மாநில லாட்டரி விளம்பர படத்தில் இருந்து ஸ்ரீசாந்த் கழற்றிவிடப்பட்டார்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்சில் சிக்கி கைதாகியிருக்கும் ஸ்ரீசாந்த்தை கேரள மாநில அரசு தமது லாட்டரி விளம்பர படத்தில் இருந்து நீக்கியுள்ளது.
இதுதொடர்பாக கேரள நிதி அமைச்சர் கே.எம்.மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், கிரிக்கெட் பிக்சிங்கில் ஸ்ரீசாந்த் சிக்கியிருப்பதால் அவர் தலைமையிலான மாநில லாட்டரி விளம்பர படங்களை கேரள அரசு நீக்கம் செய்ய முடிவெடுத்து உள்ளது.
ஸ்ரீசாந்த் காருண்யா லாட்டரி பிராண்ட் மாஸ்டராக இருந்து வந்தார். இந்த லாட்டரி மூலம் கிடைக்கும் வருமானம் ஏழை மக்களின் மருத்துவ செலவுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. அவரது பெயருக்கு களங்கம் ஏற்பட்டு இருப்பதைத்தொடர்ந்து மாநில அரசு அவரை அந்த பொறுப்பில் இருந்தும் நீக்கி உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications