For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஸ் கட்டிகளின் மீது மதுவை ஊற்றி...: அமெரிக்காவில் பரவும் ’மூக்கு’ போதை கலாச்சாரம்

Google Oneindia Tamil News

A new trend of drugs in America
நியூயார்க்: ஐஸ் கட்டிகளின் மீது மதுவை ஊற்றி மூக்கு வழியாக போதையை ஏற்றும் கலாச்சாரம் அமெரிக்காவில் பெருகி வருகிறதாம். மதுவை குடிப்பதை விட இது அதிக போதை தருவதாக கூறுகிறார்கள் அமெரிக்க இளசுகள்.

பொதுவாக ஹாட் ட்ரிங்ஸ் என அழைக்கப்படும் பிராந்தி, விஸ்கி போன்ற மது பானங்களை குடித்தால் தான் போதை தலைக்கு ஏறும் என நம்மூர் ‘குடிமக்கள்' நினைத்துக் கொண்டிருக்க, அமெரிக்க இளைஞர்கள் அடுத்த கண்டுபிடிப்பை அரங்கேற்றி விட்டார்கள்.

உலர்ந்த ஐஸ் கட்டிகளை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, அதன் மீது மதுவை ஊற்றினால் ஒரு விதமான ஆவி வெளியாகுமாம். அதை அப்படியே மூக்கு மூலம் உறிஞ்சினால் அதிகளவு போதை உண்டாவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள் இந்த இளம் விஞ்ஞானிகள்.

இந்த ‘மூக்கு போதை' கலாசாரம் அமெரிக்காவில் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் வேகமாக பரவி வருகிறதாம். ஆனால், இது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என டாக்டர்கள் எச்சரித்து வருகின்றனர்.

மூச்சு காற்று மூலம் மதுவின் ஆவியை சுவாசிப்பதால் நுரையீரல் பாதிக்கப்படும் அபாயமும், அதன் விளைவாக கல்லீரலிலும் நோய் உண்டாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
American youngsters are now practicing a new trend of drugs by poring alcogal on the ice bar and swelling it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X