For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காத பெண் என்ஜீனியர் அதிரடி சஸ்பெண்ட்!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மாநகராட்சி பெண் என்ஜீனியர் திடீரென முன் அறிவிப்பின்றி சஸ்பெண்ட் செயயப்பட்டுள்ளார். சமீபத்தில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தை சரியாக பராமரிக்கவில்லை என்று இதற்குக் காரணம் கூறப்பட்டுள்ளு.

சென்னையில் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் இப்போது தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இதை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

தூத்துககுடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டு மலிவு விலையில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் செயல்பாடுகள் மறறும் உள் கட்டுமான பராமரிப்பு சம்பந்தமாக மாநகராட்சி கமிஷனர் மதுமதி தினமும் ஆய்வு செய்து வருகின்றார்.

வழக்கம்போல் மாநகராட்சியில் உள்ள 3 மலிவு விலை உணவகங்களில் கமிஷனர் மதுமதி ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள மின் இணைப்புகள் சரிவர மேற்கொள்ளப்படாமலும், பாதுகாப்பு இல்லாமலும் இருந்துள்ளது. மேலும் அவற்றில் அனைத்து பகுதி வழியாகவும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து விசாரணை நடத்தினார்.

இதன் அடிப்படையில் இளநிலை பொறியாளரும், மின் கண்காணிப்பு மேற்பார்வையளருமான சுலைமான் ஆட்சியை கமிஷனர் மதுமதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இது மாநகராட்சி அதிகாரிகள மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A Corporation engineer was suspended in Tuticorin for not taking proper care of Amma canteens.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X