For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பதி: ஏழுமலையானை எளிதாக தரிசித்த பக்தர்கள்… கூட்டம் குறைந்துள்ளது...

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Rush comes down in Tirupathi
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் குறைந்துள்ளதால் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யமுடிவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். பிரம்மோற்சவ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்வார்கள்.

இந்த வாரம் சனி, ஞாயிறு கிழமைகளில் இலவச தரிசனம் செய்யும் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிந்தன. 30 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திங்கட்கிழமை 20 மணி நேரம் காத்திருந்தனர். புதன்கிழமை பக்தர்கள் கூட்டம் குறைந்தது. 3 மணி நேரத்தில் இலவச தரிசனம் செய்தனர்.

ரூ.300 டிக்கெட் கட்டண தரிசனத்துக்கு 2 மணி நேரமும் மலைபாதையில் நடந்து வந்த பக்தர்களுக்கு 2 மணி நேரமும் ஆனது. கூட்ட நெரிசல் இல்லாமல் எளிதாக சாமி தரிசனம் செய்ய முடிந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

English summary
Heavy rush has comes down drastically in Tirupathi. Devotees could have dharsan in Two hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X