For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூபாயின் மதிப்பு ரூ.61.10 ஆக சரிவு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Indian rupee hits lifetime low of 60.80 against US dollar
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் 61.10 ஆக சரிந்துள்ளது. வரலாறு காணாத இந்த விலை வீழ்ச்சியினால் இறக்குமதியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதி ரூபாயின் மதிப்பு ரூ60.76 ஆக சரிந்தது. அதற்குப் பின்னர் இன்று மேலும் சரிந்துள்ளது.

அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலையில்( ஜூலை 8) வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.61.04 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து ஒரு டாலர் ரூ.61.10 ஐ தொட்டது. இதனையடுத்து நண்பகலில் ரூ. 60.80 ஆக மாறியது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கு மேல் அதிகரித்துள்ளதால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது கவலையளித்தாலும் திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து பின்னலாடை ஏற்றுமதி செய்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

English summary
After slumping to a new lifetime low of 60.80 against the US dollar in early trade, the Indian rupee today recovered a bit to 61.04 in late morning deals on suspected intervention by the Reserve Bank of India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X