For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனடா விமான நிலையத்தில் ஐந்தரை மணி நேரம் அவஸ்தைப்பட்ட பெங்காலி நடிகை!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: கமல்ஹாசன், ஷாருக் கான், இர்பான் கானுக்கு அமெரிக்காவில் விசாரணை என்ற பெயரில் அவமரியாதை நிகழ்த்தப்பட்ட நிலையில் தற்போது இந்திய நடிகை ஒருவரை கனடா விமான நிலையத்தில் அவமானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு போகும் இந்தியர்கள் பலருக்கும் இத்தகைய அவமானங்கள் தொடர் கதையாகி வருகிறது.

அப்துல் கலாமையே செக்கப் செய்து இந்தியர்களை கொதிக்க வைத்தவர்கள் அமெரிக்கர்கள். இப்போது கனடாவிலும் இந்தியப் பிரபலங்களுக்கு சோதனைக் காலமாகியுள்ளது.

ஹாசன் என்ற பெயரால் சோதனைக்குள்ளான கமல்

ஹாசன் என்ற பெயரால் சோதனைக்குள்ளான கமல்

கமல்ஹாசனுக்கும் இப்படித்தான் அடிக்கடி நேர்ந்துள்ளது. அவரது பெயரை ஹாசன் என்று தெரியாமல் ஹசன் என்று அர்த்தம் எடுத்துக் கொண்டு நீ யார், உனக்கு யாருடனெல்லாம் தொடர்பு உள்ளது என்று குடைந்து குடைந்து பலமுறை விசாரித்துள்ளனர்.

ஷாருக்கையும் விடலையே

ஷாருக்கையும் விடலையே

இதேபோல ஷாருக் கானுக்கும் பலமுறை அமெரிக்க விமான நிலையங்களிலும், படப்பிடிப்புக்குப் போகும் தருவாயிலும் சோதனைகள் வந்துள்ளன.

இர்பான் கானுக்கும்

இர்பான் கானுக்கும்

பாலிவுட் நடிகர் இர்பான் கானுக்கும் அமெரிக்க விமான நிலையத்தில் சோதனை வந்துள்ளது.

இப்போது ரிதுபர்னா செங்குப்தாவுக்கு.. கனடாவிலிருந்து

இப்போது ரிதுபர்னா செங்குப்தாவுக்கு.. கனடாவிலிருந்து

இந்த வரிசையில் தற்போது இந்திய நடிகை ரிதுபர்னா செங்குப்தா சேர்ந்துள்ளார். ஒரு மாற்றாக, கனடாவில் அவமரியாதைக்குள்ளாகியுள்ளார் ரிது.

ஐந்தரை மணி நேர விசாரணை

ஐந்தரை மணி நேர விசாரணை

விசாரணை என்ற பெயரில் டோரன்டோ பியர்சன் விமான நிலையத்தில் வைத்து ஐந்தரை மணி நேரம் ரிதுவை அலைக்கழித்துள்ளனராம்.

விசா முடிஞ்சு போச்சு என்று சொல்லி

விசா முடிஞ்சு போச்சு என்று சொல்லி

ரிதுபர்னா டோரன்டோ போய் இறங்கியவுடனேயே அவரை விசாரணைக்கு கூட்டிக் கொண்டு போனார்களாம். உங்களது விசா முடிந்து போய் விட்டது என்பதுதான் காரணமாம்.

ஆனால் 2015 வரை இருக்காமே

ஆனால் 2015 வரை இருக்காமே

ஆனால் 2015 வரை தனக்கு விசா காலம் இருப்பதை ரிதுபர்னா சுட்டிக் காட்டியும் அதை அங்குள்ள அதிகாரிகள் ஏற்கவில்லையாம்.

சூட்கேஸ் உள்ளிட்டவற்றை திறந்து பார்த்து சோதனை

சூட்கேஸ் உள்ளிட்டவற்றை திறந்து பார்த்து சோதனை

ரிதுபர்னாவின் விசாவை மட்டும் விசாரிக்காமல், அவர் கொண்டு வந்திருந்த பொருட்களையெல்லாம் சோதனையிட்டார்களாம். சூட்கேஸைத் திறந்து பார்த்து என்னவெல்லாம் இருக்கிறது என்று ஆய்ந்தார்களாம்.

செல்லையும் பிடுங்கிட்டாங்க

செல்லையும் பிடுங்கிட்டாங்க

அவர் வைத்திருந்த செல்போனையும் பிடுங்கி வைத்துக் கொண்டு விசாரித்தார்களாம்.

விரக்தியில் அழுததால் பைத்தியம் பட்டம் கட்டி...

விரக்தியில் அழுததால் பைத்தியம் பட்டம் கட்டி...

இந்த சோதனையால் ஏற்பட்ட விரக்தியால் ரிதுபர்னா அழுதுள்ளார். இதைப் பார்த்த அதிகாரிகள் அவர் மன நிலை பாதித்தவர் என்றும் கூறியுள்ளனராம். அவரை மருத்துவமனைக்கும் அனுப்ப வேண்டும் என்று கூறினார்களாம்.

தேவையில்லாத விசாரணை

தேவையில்லாத விசாரணை

இதுகுறித்து ரிதுபர்னா கூறுகையில், எனது விசாவை வைத்து பெரும் பிரச்சினையாக்கி விட்டார்கள். சரி விசாவைக் கேன்சல் செய்து என்னை திருப்பி அனுப்புங்கள் என்றால் அதுவும் முடியாது என்று கூறினார்கள்.

ஒரு வழியாக அனுமதி

ஒரு வழியாக அனுமதி

இப்படி நீண்ட நேர அலைக்கழிப்புக்குப் பின்னர் ஒரு வழியாக கனடாவுக்குள் நுழைய ரிதுபர்னாவை அதிகாரிகள் அனுமதித்தனராம். அதன் பிறகு அவர் வங்க சம்மேளன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

மாமனார் மாமியாருடன்

மாமனார் மாமியாருடன்

ரிதுபர்னாவுடன் அவரது 80 வயதான மாமனார், மாமியாரும் உடன் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிதுபர்னா தேசிய விருது பெற்ற நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After Kamal Haasan, Shah Rukh Khan and Irrfan Khan, it is the turn of Rituparna Sengupta to face harassment abroad. The national award-winning actress from West Bengal was interrogated for nearly five-and-a-half hours at the Pearson International Airport in Toronto on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X