For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 30% எம்.பி, எம்.எல்.ஏக்களை டிஸ்மிஸ் செய்யனும்!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.எல்.ஏ,எம்.பிகள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பின்படி நாட்டில் 30% எம்.எல்.ஏ, எம்.பிகள் டிஸ்மிஸ் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகியவை தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் தாக்கல் செய்த விவரங்களை தொகுத்துள்ளன. அதே போல http://myneta.info இணையத்தளம் ஒவ்வொரு எம்.எல்.ஏ, எம்.பி.யின் சொத்து விவரம், குற்ற வழக்கு விவரம் உள்ளிட்ட அனைத்தையும் மாநிலங்கள் மற்றும் கட்சிகள் வாரியாக வெளியிட்டுள்ளது. இந்த இணையத்தளத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தாக்கல் செய்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இதன்படி 14% எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள்மீது 'மிகக் கடுமையான' குற்றங்களின் கீழ் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றனவாம்..

162 கிரிமினல் எம்.பிக்கள்

162 கிரிமினல் எம்.பிக்கள்

லோக்சபாவின் 543 எம்.பிகளில் 162 பேர் அதாவது 30% பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

1,258 கிரிமினல் எம்.எல்.ஏக்கள்

1,258 கிரிமினல் எம்.எல்.ஏக்கள்

அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களின் மொத்த எண்ணிக்கை 4,032. இதில் 1,258 பேர் அதாவது 31% பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் 15% எம்.எல்.ஏக்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் இருக்கின்றன.

ஜார்க்கண்டில்தான் அதிகம்!

ஜார்க்கண்டில்தான் அதிகம்!

நாட்டிலேயே ஜார்க்கண்ட் மாநிலம்தான் அதிக கிரிமினல் எம்.எல்.ஏக்களைக் கொண்ட மாநிலமாக ‘திகழ்கிறது'. 2009 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு தேர்வான எம்.எல்.ஏக்களில் 74% பேர் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள்.

பீகார், உ.பிக்கும் ‘நல்ல’ இடம்

பீகார், உ.பிக்கும் ‘நல்ல’ இடம்

இதேபோல் பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநில எம்.எல்.ஏக்களுக்கும் ‘கிரிமினல்' வழக்கு வாங்கியதில் ‘நல்ல' இடம்! பீகார் மாநிலத்தில் 58 எம்.எல்.ஏக்கள், உத்தரபிரதேசத்தில் 47% எம்.எல்.ஏ.க்கள் கிரிமினல்கள்.

ரொம்ப நல்ல மாநிலம் மணிப்பூர்

ரொம்ப நல்ல மாநிலம் மணிப்பூர்

நாட்டிலேயே கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இல்லாத எம்.எல்.ஏக்களைக் கொண்ட சட்டசபையாக இருப்பது மணிப்பூர் மாநிலம்தான்!

டெர்ரர் ஜே.எம்.எம்.கட்சி

டெர்ரர் ஜே.எம்.எம்.கட்சி

கட்சிகளைப் பொறுத்தவரையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாதான் அதிக கிரிமினல்களைக் கொண்டதாக இருக்கிறது. அக்கட்சியின் 82% எம்.பி, எம்.எல்.ஏக்கள் கிரிமினல்கள்

ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி

ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு அடுத்தபடியாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 64% கிரிமினல் எம்.எல்.ஏ, எம்.பிக்களையும் சமாஜ்வாடி கட்சி 48% எம்.பி, எம்.எல்.ஏக்களையும் கொண்டிருக்கிறது.

காங்கிரஸை ‘வென்ற’ பாஜக

காங்கிரஸை ‘வென்ற’ பாஜக

தேசிய கட்சிகளில் கிரிமினல் எம்.பி., எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் காங்கிரஸை வென்றுவிட்டது பாரதிய ஜனதா கட்சி. பாஜகவின் 31% எம்.பி, எம்.எல்.ஏக்கள் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள்.. காங்கிரஸில் இது 21%தானாம்.

அதாவது பாரதிய ஜனதா கட்சியின் 1017 எம்.பி, எம்.எல்.ஏக்களில் 313 பேர் மீதும் ங்கிரஸ் கட்சியின் 1433 எம்,பி, எம்.எல்.ஏக்களில் 305 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் இருக்கின்றனவாம்.

English summary
In a landmark verdict, the Supreme Court ruled Wednesday that a convicted elected representative cannot continue in office. However, an analysis of affidavits declared by MPs and legislators shows that around 30 percent of 4,807 lawmakers have criminal cases against them, said a think-tank.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X