For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காது காங்... சொல்கிறார் 'நார்த் இந்திய நாராயணசாமி'!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி பெயரை காங்கிரஸ் கட்சி அறிவிக்காது என்று திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

தென்னகத்திற்கு நாராயணசாமி போல வட இந்தியாவுக்கு திக்விஜய் சிங். நாராயணசாமி அடிக்கடி கூடங்குளம் குறித்துப் பேசுவதைப் போல ராகுல் காந்தி குறித்தும் இன்ன பிற காங்கிரஸ் விவகாரங்கள் குறித்தும் திக்விஜய் சிங்தான் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் வருகிற லோக்சபா தேர்தலின்போது ராகுல் காந்தியை பிரதமராக காங்கிரஸ் அறிவிக்காது என்று கூறியுள்ளார். வழக்கமாக ராகுல் காந்திக்கு ஆதரவாகத்தான் அவர் பேசுவது வழக்கம் என்பதால் அவரது இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

மோடியெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது

மோடியெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது

இதுகுறித்து திக்விஜய் சிங் கூறுகையில், நரேந்திர மோடிதான் ராகுல் காந்திக்குப் போட்டியாக இருப்பார் என்று கூறுவதில் உண்மை இல்லை. மோடியை நாங்கள் பொருட்டாகவே நினைப்பதில்லை.

முன்னாடியே சொல்லும் வழக்கம் இல்லை

முன்னாடியே சொல்லும் வழக்கம் இல்லை

லோக்சபா தேர்தல் என்பது குடியரசுத் தலைவர் தேர்தல் போல அல்ல. தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அறிவிக்காது. அதேபோலத்தான் முதல்வர் வேட்பாளரும். கர்நாடகத்தில் கூட நாங்கள் முன்பே முதல்வர் இவர்தான் என்று யாரையும் சொல்லவில்லையே..

இடதுசாரிகளுடன் மீண்டும் உறவா...

இடதுசாரிகளுடன் மீண்டும் உறவா...

இடதுசாரிகளுடன் மீண்டும் கூட்டணி அமைப்பது தொடர்பாக நாங்கள் அவசரப்பட விரும்பவில்லை. தேர்தலுக்குப் பிறகுதான் எதையும் தீர்மானிக்க முடியும்.

எந்தத் துருவத்தையும் பார்த்துப் பயப்படவில்லை

எந்தத் துருவத்தையும் பார்த்துப் பயப்படவில்லை

மோடியை பாஜக பிரசாரக் குழுத் தலைவராக நியமித்தது குறித்து நாங்கள் கவலைபப்டவில்லை. அனைவரது கவனமும் அவர் மீது படிந்திருப்பதாகவும் நாங்கள் கருதவில்லை. துருவ அரசியலில் காங்கிரஸுக்கு நம்பிக்கையும் கிடையாது.

மீண்டும் மன்மோகன் பிரதமராவாரா

மீண்டும் மன்மோகன் பிரதமராவாரா

முதலில் தேர்தல் வரட்டும், தேர்தல் நடந்து முடியட்டும். மக்கள் தீர்ப்பின்படி புதிய பிரதமர் அமைவார். அதற்கு முன்பே எதையும் தீர்மானமாக சொல்ல முடியாது.

திமுக விலகியது புதிய விஷயமில்லை

திமுக விலகியது புதிய விஷயமில்லை

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக, திரினமூல் காங்கிரஸ் போன்றவை விலகியது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ஒரு கூட்டணியில், அது பாஜக கூட்டணியாகஇருந்தாலும் சரி, ஐக்கிய முற்போ்ககுக் கூட்டணியாக இருந்தாலும் சரி, இதுபோன்ற நிகழ்வுகள் இருக்கத்தான் செய்யும் என்றார் திக் விஜய் சிங்.

English summary
The Congress will not declare Rahul Gandhi as its Prime Ministerial candidate in the Lok Sabha elections, senior party leader Digvijay Singh hinted on Friday while dismissing suggestions that BJP's projection of Narendra Modi is a challenge to it. He also did not say whether Prime Minister Manmohan Singh could be a candidate for the top post once again if the party wins next year's elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X