For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்து அரச குடும்பத்தின் வாரிசு பெயர்: ஆஸ்திரேலியாவில் அனல் பறக்கும் ‘பெட்டிங்’

Google Oneindia Tamil News

மெல்போர்ன்: இளவரசி கேட் மிடில்டனுக்குப் பிறந்துள்ள குழந்தைக்கு என்ன பெயர் வைப்பார்கள் என்பது குறித்த பெட்டிங், ஆஸ்திரேலியாவில் சூடு பிடித்துள்ளதாம்.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பெட்டிங் சூடு பிடித்துள்ளதாம். எங்கு பார்த்தாலும் இளவரசியின் மகனுக்கு என்ன பெயர் என்ற பேச்சுதான் தீவிரமாக உள்ளதாம்.

இதுவரை ஆணா, பெண்ணா என நடந்து வந்த பெட்டிங்கை ‘குட்டிப்பையன்' பிறந்து முடித்து வைத்துவிட்டான்.

ஜார்ஜ் தான் பர்ஸ்ட்...

ஜார்ஜ் தான் பர்ஸ்ட்...

இதுகுறித்து அயர்லாந்து புக்கிகளின் செய்தித் தொடர்பாளர் ரோரி ஸ்காட் கூறுகையில், இப்போதைக்கு ஜார்ஜ் என்ற பெயர்தான் பெட்டிங்கில் முன்னணியில் உள்ளது. அடுத்த இடத்தில் ஜேம்ஸ், அலெக்சாண்டர், லூயிஸ் ஆகிய பெயர்கள் உள்ளன.

ஹென்றிக்கும் கிராக்கி இருக்கு...

ஹென்றிக்கும் கிராக்கி இருக்கு...

கேட் சகோதரரின் பெயர்தான் ஜேம்ஸ். அதேபோல ஹென்றி என்ற பெயருக்கும் நல்ல கிராக்கி உள்ளது.

’கய்’னு தான் வைப்பாங்க...

’கய்’னு தான் வைப்பாங்க...

அதேபோல கய் என்ற பெயர் வேய்ன் என்ற புக்கி நிறுவனத்தின் முக்கியப் பெயராக உருவெடுத்துள்ளதாம். கய் என்பது இங்கிலாந்து கால்பந்து வீரர் வேயன் ரூனியின் மகன் பெயராகும்.

வாசகர்கள் சாய்ஸ்....

வாசகர்கள் சாய்ஸ்....

ஆஸ்திரேலியா ஆன்லைன் சர்வே ஒன்றில் 5 பெயர்களை 1500 வாசகர்கள் பரிந்துரைத்துள்ளனறாம். அதில் ஜார்ஜ், ஜேம்ஸ் ஆகியவை முதலிடங்களில் உள்ளனவாம். அடுத்து ரிச்சர்ட், பிலிப், அலெக்சாண்டர் ஆகிய பெயர்கள் உள்ளனவாம்.

வழக்கம் போலத் தான்...

வழக்கம் போலத் தான்...

பொதுவாக அரச குடும்பத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைக்கு பரம்பரைப் பெயர்களாக முன்னோர்களின் பெயரையே வைப்பது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம். எனவே, வில்லியம்-கேட் தம்பதியினரும் அதுபோன்றதொரு பெயரை வைக்கவே விரும்புவார்கள் என அவர்களது நெருக்கிய வட்டாரம் தெரிவிக்கின்றது.

English summary
Betting on royal baby's name has reached a feverish pitch after Kate gave birth to a boy on Monday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X