For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உணவு பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் அவசியம்: ஜெ. வலியுறுத்தல்!

By Mathi
Google Oneindia Tamil News

Jayalalithaa demands changes to 'Food Insecurity Ordinance'
சென்னை: பார்லிமென்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கும் உணவுப் பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டம் மத்திய அரசின் தன்னிச்சையான முடிவு. இச் சட்டம் மூலமாக அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளபோதும், தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்த சட்டம், உணவுப் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாக அமையும்.

இதனால் பொது விநியாகத் திட்டத்தை ஏற்கனவே செயல்படுத்திவரும் மாநிலங்களுக்கு போதிய உணவு தானியங்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்வது, தற்போது வழங்கப்பட்டுவரும் விலையில் உணவு தானியங்களை 3 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்க முடியும் என்ற முடிவை மாற்றியமைப்பது போன்ற திருத்தங்களை மசோதாவில் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

English summary
Tamil Nadu Chief Minister J Jayalalithaa today wrote to Prime Minister Manmohan Singh seeking five amendments to the Food Security Ordinance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X