For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனைத்துலக இஸ்லாமியர்களுக்கும் ‘ரம்ஜான் வாழ்த்து’ தெரிவித்த போப் பிரான்சிஸ்

Google Oneindia Tamil News

Pope Francis' Ramadan Greetings For Id Al-Fitr Sets Interfaith Example
வாடிகன் சிட்டி: முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ இளைஞர்கள் மற்றவர்களைக் கண்ணியமாகப் பேசவும், மற்ற மதத்தினரின் பழக்கங்களை இழித்துக் கூறாமலிருக்க கற்பித்தல் வேண்டும் என தனது ரம்ஜான் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார் போப் பிரான்சிஸ்.

வரும் வாரம் இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப் பட இருக்கிறது. பொதுவாக ரம்ஜான் பண்டிகைக்கான வாழ்த்துச் செய்தியை கத்தோலிக்கத் தலைவரான போப்பாண்டவர் அனுப்புவது வழக்கம்.

அதுபோல், இம்முறையும் போப் பிரான்சிஸ் தானே கையெழுத்திட்டு அரபு உட்பட பல மொழிகளில் தனது வாழ்த்துச் செய்தியை இஸ்லாமிய நண்பர்களுக்காக அனுப்பியுள்ளார். அதில், முஸ்லிம் மக்கள் மீதும்,மதத் தலைவர்கள் மீதும் தனக்கிருக்கும் நட்பையும், மரியாதையையும் தெரிவித்திருக்கிறார் போப்.

மேலும், இந்த ஆண்டு அனுப்பப்படும் செய்தியைப் படிப்பவர்கள் அனைவரும், கிறிஸ்துவ, முஸ்லிம் மதத்தினரிடையே கல்வி மூலம் பரஸ்பரம் மரியாதையை ஊக்குவித்துக் கொள்ள வேண்டும் என்றும், வாழ்க்கை,கண்ணியம் மற்றவர்களின் உரிமைகள் இவை அனைத்தையும் மதிக்கும் மக்கள் அனைவருக்கும் இந்த செய்தி பொதுவானது என்றும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ இளைஞர்கள் மற்றவர்களைக் கண்ணியமாகப் பேச மற்ற மதத்தினரின் பழக்கங்களை இழித்துக் கூறாமலிருக்க கற்பித்தல் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

English summary
Pope Francis personally reached out to Muslims around the world with Id al-Fitr greetings for the holiday that concludes the holy month of Ramadan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X