For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 ஆண்டுகளாக தூத்துக்குடி கலெக்டராக இருந்த ஆஷிஷ் குமார் மாற்றம்

Google Oneindia Tamil News

Ashikumar and Ravikumar
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டம் துறையின் துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் 22வது கலெக்டராக கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி பொறுப்பேற்ற ஆஷிஷ்குமார் இரண்டு ஆண்டுகள் இப்பொறுப்பில் இருந்துள்ளார். இவரைவிட இதற்கு முன்பு 4 கலெக்டர்கள் மட்டுமே அதிக நாட்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தூத்துக்குடி மாவட்டத்தின் கலெக்டராக எம்.ரவிகுமார் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் அரியலூர் மாவட்ட கலெக்டராக பணிப்புரிந்தவர்.

தூத்துக்குடி மாவட்டம் உதயமாகி இதுவரை சுமார் 25 ஆண்டுகாலம் ஆகியுள்ள நிலையில் மாவட்டத்தின் கலெக்டர்களாக 22 கலெக்டர்கள் பதவி ஏற்றுள்ளனர். தற்போது 23வது கலெக்டராக ரவிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட கலெக்டர்கள் ஆண்டுக்கு ஒருமுறை, இருமுறை ஏன் பலமுறை மாறுவது என்பது தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழக்கமாகிப்போய் விட்டது. மாவட்ட கலெக்டர்கள் மாறிக்கொண்டே வருவதற்கு ஏற்ப தூத்துக்குடி மாவட்டமானது ஏதாவது அபரீத வளர்ச்சி அடைந்திருக்கிறதா என்றால் அப்படி எதுவுமே இல்லவே இல்லை.

இதேபோல தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனராக இருந்த சரவணவேல் ராஜ் அரியலூர் கலெக்டராகவும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி எம்.குற்றாலிங்கம் அறிவியல் நகர துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Tuticorin collector Ashish Kumar has been shifted and the new collector is Ravikumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X